சிலாங்கூரில் இசிஆர்எல் திட்டம் 80.68 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது; ஜனவரி 2027-இல் சேவை தொடங்கும்

7 மார்ச் 2026, 3:45 AM
சிலாங்கூரில் இசிஆர்எல் திட்டம் 80.68 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது; ஜனவரி 2027-இல் சேவை தொடங்கும்

கோம்பாக், மார்ச் 7- கிழக்குக்கரை ரயில் இணைப்புத் திட்டம் (ECRL) சிலாங்கூர் மாநிலத்தில் தற்போது 80.68 சதவீத வேலைகளை நிறைவு செய்துள்ளது.

ஒட்டுமொத்த தேசிய அளவில் இந்தத் திட்டம் 91.7 சதவீத முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக கோம்பாக் மாவட்ட அதிகாரி நோர் அஸ்லினா அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.

உட்கட்டமைப்புப் பணிகள், ரயில் தண்டவாளங்கள் அமைத்தல் மற்றும் ரயில் பெட்டிகளைப் பொருத்தும் பணிகள் என அனைத்தும் திட்டமிட்டபடி சீராக நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கோம்பாக் பயணிகள் நிலையத்தின் இறுதிக்கட்ட கட்டுமானப் பணிகள் மற்றும் உட்புற அலங்கார வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

மொத்தம் 665 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த ரயில் பாதையில், சுமார் 92 கிலோமீட்டர் சிலாங்கூர் மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.

இந்தத் திட்டம் டிசம்பர் 2026-இல் முழுமையாக நிறைவடைந்து, 2027 ஜனவரி முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறுகையில், இசிஆர்எல் திட்டம் சிலாங்கூரின் பொருளாதாரம், தளவாடங்கள் மற்றும் வர்த்தகத் துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

சிலாங்கூரில் அமையவுள்ள ஐந்து முக்கிய நிலையங்களும் குறிப்பிட்ட மூலோபாய நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கோம்பாக் ஒருங்கிணைந்த முனையம் கிழக்குக்கரை மாநிலங்களுக்கான நுழைவாயிலாகவும், பண்டார் செரண்டா முக்கிய தளவாட மையமாகவும், புஞ்சாக் ஆலாம் பாரம்பரிய சுற்றுலா மையமாகவும், காப்பார் உயர் மதிப்புள்ள தொழில்பேட்டையாகவும் மற்றும் ஜாலான் காஸ்தாம் சர்வதேச நுழைவாயிலாகவும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், பிப்ரவரி 2025-இல் தொடங்கப்பட்ட சுங்கை பத்து மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை மேம்படுத்தும் இரண்டாம் கட்டத் திட்டம் தற்போது 35 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.

சுமார் 5 மில்லியன் ரிங்கிட் செலவில் மேற்கொள்ளப்படும் இத்திட்டம், அப்பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளைக் குறைக்க உதவும் என்று நோர் அஸ்லினா மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619