ECRL தடம் முழுவதும் 4G, 5G வலையமைப்பு உள்கட்டமைப்பை வழங்க MRL, மெக்சிஸை நியமித்துள்ளது - ஃபாஹ்மி

11 பிப்ரவரி 2026, 7:22 AM
ECRL தடம் முழுவதும் 4G, 5G வலையமைப்பு உள்கட்டமைப்பை வழங்க MRL, மெக்சிஸை நியமித்துள்ளது - ஃபாஹ்மி

குவாந்தான், பிப் 11 – கிழக்கு கடற்கரை ரயில் பாதை (ECRL) தடம் முழுவதும் 4G மற்றும் 5G செல்லிடப்பேசி வலையமைப்பு உள்கட்டமைப்பை வழங்குவதற்காக மலேசியா ரெயில் லிங்க் சென்டிரியான் பெர்ஹாட் (MRL), மெக்சிஸ் பெர்ஹாட் (Maxis) நிறுவனத்தை நியமித்துள்ளது என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபட்சில் கூறினார்.

இந்த அணுகுமுறை உள்கட்டமைப்புப் பயன்பாட்டை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சேவை வழங்குநர்கள் பயனர் அனுபவத்தையும் சேவையின் தரத்தையும் மேம்படுத்தும் முயற்சிகளில் கவனம் செலுத்தவும் வழிவகுக்கிறது என்றார் அவர்.

"ECRL போன்ற உயர் தாக்கத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம், நாட்டின் டிஜிட்டல் எதிர்காலத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சியில் இந்த ஒத்துழைப்பு ஒரு முக்கிய படியாகும்," என்று அவர் கூறினார்.

கோத்தாசாஸ் நிலையத்தில் நடைபெற்ற ECRL திட்டத்தின் கோல்டன் ட்ரென் EMU & E-Loco-வின் சிறப்பு வருகை மற்றும் ECRL தடத்திற்கான செல்லிடப்பேசி வலையமைப்பு உள்கட்டமைப்பு வழங்குநருக்கான நியமனக் கடிதம் ஒப்படைப்பு விழாவில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.

"இந்த முயற்சி 'சாலையுள்ள இடத்தில் இணையம்' ('Di Mana Ada Jalan, Di Situ Ada Internet') என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப அமைந்துள்ளது. இது ECRL தடம் உட்பட பல முக்கிய சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து பாதைகளில் இணையக் கவரேஜை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது," என்றார்.

மேலும், செல்நெறி டிஜி, டெலிகொம் மலேசியா மற்றும் YTL போன்ற பிற சேவை வழங்குநர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் பல இயக்காளர்களுக்கான மைய வலையமைப்பை தனது தரப்பு அறிமுகப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை ECRL பயணிகளுக்குப் பயனளிப்பதுடன், நகர்ப்புறங்கள், போக்குவரத்து சார்ந்த புதிய நகர்ப்புற மேம்பாடுகள், புறநகர்ப் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்கள் உட்பட ECRL வழித்தடங்களில் வலையமைப்பு கவரேஜை வலுப்படுத்தும் என்று ஃபாஹ்மி குறிப்பிட்டார்.

"இந்த வலையமைப்பு உள்கட்டமைப்பு நிறைவடைந்தவுடன், மெக்சிஸ், செல்நெறி டிஜி, யூ மொபைல், YTL மற்றும் டெலிகொம் மலேசியா ஆகிய நிறுவனங்கள், சேவையின் தரத்திற்கான கட்டாயத் தரநிலைகளுக்கு (MSQoS) இணங்க, ECRL பயணிகளுக்கு 4G மற்றும் 5G சேவைகளை வழங்க முடியும்," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619