கிள்ளான் மாவட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரிம3.3 லட்சம் நிதி உதவி: YIDE நற்செயல்

2 மார்ச் 2026, 7:11 AM
கிள்ளான் மாவட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரிம3.3 லட்சம் நிதி உதவி: YIDE நற்செயல்

ஷா ஆலாம், மார்ச் 2- கிள்ளான் மாவட்டத்தைச் சேர்ந்த 2,218 ஆதரவற்ற குழந்தைகளுக்கு, எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு யாசான் இஸ்லாம் டாருல் எஹ்சான் (YIDE) அமைப்பு மொத்தம் ரிம332,700 நிதி உதவியை வழங்கியுள்ளது.

இந்த ரமலான் மாதத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நான்காவது தொடர் நிகழ்வான இத்திட்டம் குறித்து, கம்போங் ராஜா ஊடா பள்ளிவாசலில் நடைபெற்ற விழாவில் அதன் தலைவர் டான் ஸ்ரீ மஸ்லான் மன்சோர் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்தார்.

இந்நிகழ்ச்சியில் நேரடியாகக் கலந்துகொண்ட 679 ஆதரவற்ற  குழந்தைகளுக்கு தலா ரிம150 வீதம் மொத்தம் ரிம101,850 நன்கொடை வழங்கப்பட்டது.

நிகழ்விற்கு வர இயலாத 1,470 அனாதைக் குழந்தைகளுக்கும் அதே அளவிலான தொகை அவரவர் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுவதை உறுதி செய்ய வெ 220,500 ரிங்கிட்  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2026-ஆம் ஆண்டுக்கான ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஹரிராயா நன்கொடை வழங்கும் இவ்விழாவில் சிலாங்கூர் பட்டத்து இளவரசர் தெங்கு அமீர் ஷா அவர்கள் நேரில் வருகை தந்து சிறப்பித்தார்.

இந்த ஆண்டு சிலாங்கூர் மாநிலம் முழுவதிலும் உள்ள 12,470 அனாதைக் குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் YIDE அமைப்பு மொத்தம் ரிம1.87 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த உயரிய திட்டத்தின் மூலம் தகுதியுள்ள அனைத்து குழந்தைகளும் விடுபடாமல் உதவி பெறுவதை தாங்கள் உறுதி செய்துள்ளதாக டான் ஸ்ரீ மஸ்லான் மன்சோர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.


உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619