பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும்: சிலாங்கூர் சுல்தான் வேண்டுகோள்

20 மார்ச் 2026, 3:13 AM
பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும்: சிலாங்கூர் சுல்தான் வேண்டுகோள்

ஷா ஆலம், மார்ச் 20 – தற்போதைய உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் நிச்சயமற்ற சூழலைக் கருத்தில் கொண்டு, சிலாங்கூர் மக்கள் அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடனும் சிக்கனத்துடனும் செயல்பட வேண்டும் எனச் சிலாங்கூர் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் போர்க்காலச் சூழல்கள் மற்றும் மோதல்கள் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியப் பெருமக்களுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை 1447-ஆம் ஆண்டுக்கான ஹரிராயா ஐடில்பித்ரி பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மாட்சிமை தங்கிய சுல்தான் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய உலகளாவிய நெருக்கடிகளினால் ஏற்படக்கூடிய பொருளாதாரத் தாக்கங்களை எதிர்கொள்ள, மக்கள் ஒவ்வொருவரும் 'வரும்முன் காப்பதே சிறந்தது' எனும் பழமொழிக்கு ஏற்ப, திட்டமிட்டுச் செலவு செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

இறைவனின் பேரருளால் நாம் இந்தத் திருநாளை அமைதியான சூழலில் கொண்டாடும் பாக்கியத்தைப் பெற்றுள்ளோம் எனக் குறிப்பிட்ட சுல்தான் அவர்கள், ஒரு மாதக் கால ரமலான் நோன்பிற்குப் பிறகு பிறக்கும் இந்த ஷவ்வால் மாதத்தை மகிழ்ச்சியுடனும், சகோதரத்துவத்துடனும் கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டார்.

அதே வேளையில், வெளிநாடுகளில் நடக்கும் விரும்பத்தகாத நிகழ்வுகளைப் பாடமாகக் கொண்டு, நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் சீர்குலைக்கும் மோதல்களைத் தவிர்த்து வாழுமாறு இஸ்லாமிய சமூகத்திற்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள நன்மைகளுக்காக நாம் நன்றி கூறக் கடமைப்பட்டிருந்தாலும், சவாலான காலங்களில் நாம் அலட்சியமாக இருக்கக்கூடாது என்றும் மாட்சிமை தங்கிய சுல்தான் அவர்கள் எச்சரித்தார்.

நாட்டின் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தொடங்கி பொதுமக்கள் வரை அனைவரும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் நாட்டின் செழுமைக்கும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றும் அவர் தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.

நிறைவாக, சிலாங்கூர் மாநில மக்கள் மற்றும் ஒட்டுமொத்த மலேசியர்களுக்கும் மாட்சிமை தங்கிய சுல்தான் அவர்களும், பேரரசி தெங்கு பெர்மாய்சூரி ஹாஜா நோராஷிகின் அவர்களும் தங்களது இனிய ஹரிராயா ஐடில்பித்ரி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்தப் பெருநாள் கொண்டாட்டம் சமூகங்களுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தி, அனைவருக்கும் மகிழ்ச்சியையும் ஆசீர்வாதத்தையும் கொண்டு வரட்டும் என அவர்கள் வாழ்த்தினர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619