பெட்டாலிங் ஜெயா,பிப் 23 - ஜாலான் ஸ்ரீ மஞ்சா மற்றும் என்.பி.இ நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்கு அடைபட்ட கால்வாய்கள், பராமரிப்பற்ற தனியார் தடுப்புக் குளம் மற்றும் அசாதாரண கனமழை ஆகியவையே முதன்மைக் காரணங்கள் என பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ) தெரிவித்துள்ளது.
இரண்டு மணி நேரத்தில் பதிவான 182 மில்லிமீட்டர் அளவிலான மிக அதிகப்படியான மழையால் வடிகால் அமைப்புகள் திணறிய வேளையில், அருகில் உள்ள ஆற்று நீர் மட்டம் உயர்ந்ததால் வெள்ள நீர் குடியிருப்புகளுக்குள் பின்னோக்கிப் பாய்ந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
மழைநீர் தடையின்றி வெளியேறுவதை உறுதி செய்ய பாதிக்கப்பட்ட பகுதிகளில் தூர்வாரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, சம்பந்தப்பட்ட மேம்பாட்டாளர்கள் தங்கள் நிலத்திலுள்ள வடிகால் அமைப்புகளை உடனடியாகச் சீரமைக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
2015-ஆம் ஆண்டு முதல் 17 முறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இப்பகுதியில் மீண்டும் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க, நான்கு முக்கிய இடங்களில் நிரந்தர நீர் இறைக்கும் பம்புகளைப் பொருத்த வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி அமைச்சகத்திடம் 2 மில்லியன் ரிங்கிட் நிதி கோரப்பட்டுள்ளது.
சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்து வரும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஏற்ப வடிகால் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ள மாநகராட்சி, பொதுமக்களும் சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
ஜாலான் ஸ்ரீ மஞ்சா வெள்ளம்: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி விளக்கம்
23 பிப்ரவரி 2026, 5:30 AM
தொடர்புடைய செய்திகள்
selangor
அடுத்த 10 ஆண்டுகால வளர்ச்சித் திட்டத்தைப் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி தயாரித்து வருகிறது
Shalini Rajamogun
15 மார்ச் 2026

selangor
சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளைக் கடைப்பிடித்த 2,500-க்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளர்கள் கிட்டத்தட்ட RM1 மில்லியன் மதிப்பீட்டு வரித் தள்ளுபடியைப் பெற்றுள்ளனர்
Pakiya
11 மார்ச் 2026

selangor
எம்பிபிஜே அமலாக்க நடவடிக்கைகளில் 1,200 வெளிநாட்டினர் கைது
Shalini Rajamogun
27 பிப்ரவரி 2026

selangor
ஐடில்ஃபித்ரி பெருநாளை முன்னிட்டு பட்டாசுகளை விற்பனை செய்ய தற்காலிக அனுமதியைப் பெற விண்ணப்பிக்கலாம் - எம்பிபிஜே
Shalini Rajamogun
20 பிப்ரவரி 2026

உங்கள் கருத்து என்ன?




