ஐடில்ஃபித்ரி பெருநாளை முன்னிட்டு பட்டாசுகளை விற்பனை செய்ய தற்காலிக அனுமதியைப் பெற விண்ணப்பிக்கலாம் - எம்பிபிஜே

20 பிப்ரவரி 2026, 12:54 AM
ஐடில்ஃபித்ரி பெருநாளை முன்னிட்டு பட்டாசுகளை விற்பனை செய்ய தற்காலிக அனுமதியைப் பெற விண்ணப்பிக்கலாம் - எம்பிபிஜே

ஷா ஆலம், பிப் 20: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே), அதன் நிர்வாகப் பகுதியில் உள்ள வர்த்தகர்களுக்கு ஐடில்ஃபித்ரி பெருநாளை முன்னிட்டு பட்டாசுகளை விற்பனை செய்வதற்கான தற்காலிக அனுமதியைப் பெற விண்ணப்பங்களைத் திறந்துள்ளது.

விண்ணப்பத்திற்கான கடைசி நாள் பிப்ரவரி 26 ஆகும். அனுமதிக்கப்பட்ட விற்பனை காலம் மார்ச் 5 முதல் 27 வரை என எம்பிபிஜே தெரிவித்துள்ளது.

“விண்ணப்பத்தை மாநகராட்சியிடம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு, அனைத்து விண்ணப்பதாரர்களும் மலேசியக் காவல்துறையின் (PDRM) பெட்டாலிங் ஜெயா கிளையிடமிருந்து முன் அனுமதியைப் பெற வேண்டும்.

"PDRM ஒப்புதலைப் பெற்ற பிறகு, வணிகர்கள் https://elesen.mbpj.gov.my என்ற அகப்பக்கத்தில் உள்ள எம்பிபிஜே மின்-உரிம அமைப்பு மூலம் இணையம் வழி விண்ணப்பிக்க வேண்டும்," என முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், பண்டிகைக் காலம் முழுவதும் பொதுப் பாதுகாப்பு மற்றும் சுமூகமான செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் விற்பனை காலக்கெடுவுகளைக் கடைப்பிடிக்குமாறு எம்பிபிஜே வணிகர்களுக்கு நினைவூட்டுகிறது.

கூடுதல் தகவல்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை எம்பிபிஜே உரிமம், வணிக மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறைக்கு 013-9410146 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது எம்பிபிஜே அலுவலகத்தை நாடலாம்.

தொடர்புடைய செய்திகள்

அம்பாங் ஜெயாவில் பட்டாசுகள் விற்பனை செய்ய விரும்பும் தொழில்முனைவோர் தற்காலிக உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம்

Shalini Rajamogun
25 பிப்ரவரி 2026
அம்பாங் ஜெயாவில் பட்டாசுகள் விற்பனை செய்ய விரும்பும் தொழில்முனைவோர் தற்காலிக உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம்

சீனப் புத்தாண்டு, ஹரி ராயா ஐடில்ஃபித்ரி பண்டிகைகளை முன்னிட்டு பட்டாசுகள் விற்பனைக்கு விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன – எம்பிபிஜே

Shalini Rajamogun
28 ஜனவரி 2026
சீனப் புத்தாண்டு, ஹரி ராயா ஐடில்ஃபித்ரி பண்டிகைகளை முன்னிட்டு பட்டாசுகள் விற்பனைக்கு விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன – எம்பிபிஜே

அடுத்த 10 ஆண்டுகால வளர்ச்சித் திட்டத்தைப் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி தயாரித்து வருகிறது

Shalini Rajamogun
15 மார்ச் 2026
அடுத்த 10 ஆண்டுகால வளர்ச்சித் திட்டத்தைப் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி தயாரித்து வருகிறது

சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளைக் கடைப்பிடித்த 2,500-க்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளர்கள் கிட்டத்தட்ட RM1 மில்லியன் மதிப்பீட்டு வரித் தள்ளுபடியைப் பெற்றுள்ளனர்

Pakiya
11 மார்ச் 2026
சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளைக் கடைப்பிடித்த 2,500-க்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளர்கள் கிட்டத்தட்ட RM1 மில்லியன் மதிப்பீட்டு வரித் தள்ளுபடியைப் பெற்றுள்ளனர்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619