சிலாங்கூரில் 1.45 மில்லியன் புதிய வாக்காளர்கள்: அசலினா ஒத்மான் தகவல்

27 பிப்ரவரி 2026, 8:20 AM
சிலாங்கூரில் 1.45 மில்லியன் புதிய வாக்காளர்கள்: அசலினா ஒத்மான் தகவல்

ஷா ஆலம், பிப் 27- கடந்த 2022 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில், சிலாங்கூர் மாநிலத்தில் 18 வயது பூர்த்தியடைந்த 1.454 மில்லியன் குடிமக்கள் தானியங்கி முறையில் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசலினா ஒத்மான் சைட் தெரிவித்துள்ளார்.

நாடு தழுவிய ரீதியில் இதே காலகட்டத்தில் மொத்தம் 7.586 மில்லியன் புதிய வாக்காளர்கள் தானியங்கி முறையில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 2022-ஆம் ஆண்டில் மட்டும் சிலாங்கூரில் 1.185 மில்லியன் என்ற அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

தேசிய பதிவுத் துறையிடமிருந்து பெறப்படும் துல்லியமான தரவுகளின் அடிப்படையில் இந்தத் தானியங்கிப் பதிவு நடைமுறை மேற்கொள்ளப்படுவதாக பக்ரி நாடாளுமன்ற உறுப்பினர் டான் ஹோங் பின் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் நேற்று நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.

கடந்த 2021 டிசம்பர் 15 முதல் நடைமுறைக்கு வந்த இந்தத் திட்டத்தின் மூலம், தகுதியுள்ள இளம் தலைமுறையினர் எவ்வித விண்ணப்பமும் இன்றி நேரடியாகப் பட்டியலில் சேர்க்கப்படுவதால் அவர்களின் ஜனநாயகக் கடமை உறுதி செய்யப்படுகிறது.

பொதுமக்கள் தங்களின் வாக்காளர் விவரங்களைச் சரிபார்க்க தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், 'MySPR Semak' செயலி அல்லது 03-8892 7218 என்ற ஹாட்லைன் எண்ணைப் பயன்படுத்தி உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருப்பின் 2002-ஆம் ஆண்டு தேர்தல் விதிமுறைகளின் கீழ் படிவம் C-ஐ பூர்த்தி செய்து தங்கள் உரிமையைக் கோரலாம் என்றும் அமைச்சர் தமது பதிலில் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619