ஷா ஆலம், மார்ச் 26: நேற்று அம்பாங், தாமான் புத்ரா அம்பாங்கில் உள்ள குப்பைத் தொட்டியில், தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை ஒன்று கருப்பு நெகிழிப் பையில் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
குழந்தை கண்டெடுக்கப்படுவதற்கு சுமார் நான்கு மணி நேரத்திற்கு முன்பு பிறந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக அம்பாங் ஜெயா மாவட்டக் காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் கைருல் அனுவார் காலிட் தெரிவித்தார்.
உள்ளூர் ஆடவர் ஒருவர் அளித்த தகவலின் பேரில், மாலை 6.27 மணியளவில் காவல்துறைக்கு இச்சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாக அவர் கூறினார்.
"அந்தப் பெண் குழந்தை தற்போது நலமாக அம்பாங் மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பில் உள்ளது," என்று அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்தச் செயலுக்குக் காரணமானவர்களை அடையாளம் காண, குற்றவியல் சட்டப் பிரிவு 317-இன் கீழ் மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள், காவல்துறைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அம்பாங்கில் தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது
26 மார்ச் 2026, 7:31 AM
தொடர்புடைய செய்திகள்
national
புதைக்கப்பட்ட நிலையில் சிசு ஒன்றின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது - ஐந்து பேருக்குத் தடுப்புக் காவல்
Shalini Rajamogun
26 மார்ச் 2026

national
மூன்று மாதப் பெண் குழந்தை சுயநினைவின்றி இருந்த சம்பவம் தொடர்பாகக் காவல்துறை விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது
Shalini Rajamogun
5 பிப்ரவரி 2026

national
குழந்தை பராமரிப்பு மையத்தில் நான்கு மாதக் குழந்தை மர்மமான முறையில் மரணம்
Shalini Rajamogun
10 மார்ச் 2026

national
செம்பனை தோட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஆண் குழந்தை கண்டெடுப்பு
Shalini Rajamogun
19 ஜனவரி 2026

உங்கள் கருத்து என்ன?



