கோலாலம்பூர், மார்ச் 3 – ரமலான் மற்றும் ஷவால் பெருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும் விலைகளின் நிலைத்தன்மை எவ்வித காரணமும் இன்றி உறுதி செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
ரமலான் மற்றும் ஷவால் மாதங்களில் அத்தியாவசியப் பொருட்களின் தேவை கணிசமாக அதிகரிக்கும் என்பதால், மக்கள் அதிக வாழ்க்கைச் செலவினங்களால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக பிரதமர் இந்த அறிவுறுத்தலை வழங்கியதாக அவரது மூத்த பத்திரிகைச் செயலாளர் துங்கு நஷ்ருல் அபைடா தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, 'ஓப்ஸ் பந்தாவ் 2026' மூலம் தொடர்ச்சியான கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சை (KPDN) பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
"நாடு முழுவதும் உள்ள ரமலான் சந்தைகளில் (பஜார்) விற்கப்படும் உணவுகளின் விலைகள் நியாயமானதாகவும் கட்டுப்படியாகக்கூடிய- தாகவும் இருப்பதை உறுதி செய்ய, அவற்றை மிகவும் கவனமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் பிரதமர் விரும்புகிறார்," என்று அவர் கூறினார்.
"அத்துடன், ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்தின் (PBT) ஆதரவுடன், வணிக வளாகங்கள் தூய்மைத் தரங்களுக்கு இணங்குவதற்கும் அவர் முக்கியத்துவம் அளித்துள்ளார்," என்று பிரதமர் அலுவலகத்தின் (PMO) தினசரி மாநாட்டில் அவர் தெரிவித்தார். இந்த மாநாடு அன்வார் இப்ராஹிம் மற்றும் PMO மலேசியாவின் முகநூல் பக்கங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
மேலும், மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக 'ஜுவாலான் ரஹ்மா மடாணி' திட்டமும் இந்த ரமலான் மாதம் முழுவதும் தொடரும் என்று துங்கு நஷ்ருல் கூறினார்.
"அதிகப்படியான வாழ்க்கைச் செலவினச் சுமையின்றி, இந்த ஆண்டு ரமலான் மற்றும் ஷவால் பண்டிகைகள் அனைத்து மலேசியர்களுக்கும் அர்த்தமுள்ளதாக இருப்பதை மடாணி அரசாங்கம் உறுதி செய்ய உறுதி பூண்டுள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.
-- பெர்னாமா
ரமலான், ஷவால் மாதங்களில் பொருள் விநியோகம், விலை நிலைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் - பிரதமர்
4 மார்ச் 2026, 9:02 AM
தொடர்புடைய செய்திகள்
national
புடி மடானி RON95 மானிய விலை லிட்டருக்கு RM1.99 ஆக நீடிக்கிறது - நிதியமைச்சு
Pakiya
19 மார்ச் 2026

national
தேசிய உயர்கல்வி நிதியம் 72 அஸ்னாஃப் மாணவர்களுக்கு - ‘லெஸ்தாரி சிஸ்வா மடாணி’ உதவி
Pakiya
17 மார்ச் 2026

national
தேவாலயத்தில் KPM ஈடுபாட்டுத் திட்டம் என குற்றச்சாட்டு, அவதூறு பரப்புவோர் மன்னிப்புக் கேட்க ஃபத்லினா வலியுறுத்தல்
Pakiya
14 மார்ச் 2026

national
மலேசியாவின் விநியோக வர்த்தகத் துறையில் வெளிநாட்டுப் பங்களிப்புக்கான வழிகாட்டுதல்கள் மேம்படுத்தப் படும்.
Pakiya
4 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?





