கோத்தா பாரு, பிப் 19: பச்சோக், கண்டிஸ் கடற்கரையில் மூழ்கி உயிரிழந்த தீயணைப்பு வீரரின் தம்பியின் சடலம், நேற்று அவரது அண்ணனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள அவுர் கடற்கரையில் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது.
இன்று காலை 7.10 மணியளவில் அகமட் நூருடின் அப்துல் வஹாப் (21) என்பவரின் சடலத்தை பொதுமக்கள் கண்டெடுத்தனர். உடனடியாக இது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தந்தை, அது தனது மகனின் உடல்தான் என்பதை அடையாளம் கண்டு உறுதிப்படுத்தியதாகப் பச்சோக் மாவட்ட காவல்துறைத் தலைவர், சுப்ரிடெண்டன் முகமட் இஸ்மாயில் ஜமாலுடின் தெரிவித்தார்.
"சுகாதாரப் பணியாளர்கள் மரணத்தை உறுதி செய்த பின்னர், சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது," என்று அவர் கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை, சகோதரர்கள் இருவரும் மூழ்கியதாகக் கூறப்படும் இடத்திலிருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் தொலைவில் இரண்டாவது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பினாங்கில் தீயணைப்பு வீரராகப் பணியாற்றி வந்த அகமட் பத்ருல் நயிம் அப்துல் வஹாப் (32) என்பவரின் சடலம் நேற்று மதியம் 12.52 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது.
இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு மீட்புப் படையினர் இணைந்து நடத்திய தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் இன்று காலை 9.30 மணியளவில் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டன.
-- பெர்னாமா
அண்ணனின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகே தம்பியின் உடல் கண்டுபிடிப்பு
19 பிப்ரவரி 2026, 6:47 AM
தொடர்புடைய செய்திகள்
national
தானா மேராவில் கோர விபத்து: மூதாட்டியும் சிறுமியும் சம்பவ இடத்திலேயே மரணம்
Shalini Rajamogun
18 மார்ச் 2026

national
சரவாக்கில் ரேபிஸ் தொற்றால் ஒருவர் உயிரிழந்தார்
Shalini Rajamogun
5 மார்ச் 2026

national
பிலிப்பைன்ஸ்: ஹெலிகாப்டர் விபத்தில் ``Farm Fresh Berhad`` பண்ணை நிறுவனத்தின் இயக்குநர் மரணம்
Shalini Rajamogun
5 மார்ச் 2026

antarabangsa
அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலில் பலத்த காயமடைந்த ஈரான் தலைவர் காமேனியின் மனைவி உயிரிழந்தார்
Shalini Rajamogun
3 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




