நில ஆக்கிரமிப்பு மற்றும் அனுமதியின்றி வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படுவது போன்ற சிக்கல்களைக் கையாள்வதற்கு சிலாங்கூர் மாநில தேசிய பாதுகாப்பு மன்றம் (MKN) நிர்ணயித்துள்ள இந்த நடைமுறை சிறந்த வழியாகும்

14 பிப்ரவரி 2026, 9:22 AM
நில ஆக்கிரமிப்பு மற்றும் அனுமதியின்றி வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படுவது போன்ற சிக்கல்களைக் கையாள்வதற்கு சிலாங்கூர் மாநில தேசிய பாதுகாப்பு மன்றம் (MKN) நிர்ணயித்துள்ள இந்த நடைமுறை சிறந்த வழியாகும்
நில ஆக்கிரமிப்பு மற்றும் அனுமதியின்றி வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படுவது போன்ற சிக்கல்களைக் கையாள்வதற்கு சிலாங்கூர் மாநில தேசிய பாதுகாப்பு மன்றம் (MKN) நிர்ணயித்துள்ள இந்த நடைமுறை சிறந்த வழியாகும்

ஷா ஆலாம், பிப். 14: நில உரிமையாளர்கள் போலீஸ் புகார் செய்வது, மாவட்டப் பாதுகாப்பு செயற்குழுவிடம் (JKD) முறையிடுவது மற்றும் கடைசி கட்டமாக நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொள்வது போன்ற மாநில அரசின் பரிந்துரைகள் சரியானதும் சட்டத்திற்கு உட்பட்டதும் ஆகும்.

நில ஆக்கிரமிப்பு மற்றும் அனுமதியின்றி வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படுவது போன்ற சிக்கல்களைக் கையாள்வதற்கு சிலாங்கூர் மாநில தேசிய பாதுகாப்பு மன்றம் (MKN) நிர்ணயித்துள்ள இந்த நடைமுறை சிறந்த வழியாகும் என வழக்கறிஞர் ஸுல்ஷியாமி ஹுசைனி கமாருல்ஸமான் கூறினார்.

சுயமாக நடவடிக்கை எடுப்பது பதற்றத்தை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பதால், அது நில உரிமையாளர்களை தேவையற்ற இடர்களுக்கு உள்ளாக்கும். சொந்த நிலமாக இருந்தாலும் குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

"ஏதேனும் நடந்தால், அது குற்றவியல் தொடர்பானதாக இல்லாவிட்டாலும் போலீஸ் புகார் செய்வது நல்லது. அங்கே உண்மையில் என்ன நடந்தது என்பதைப் பதிவு செய்யவே இந்த போலீஸ் புகார்."

"எனவே, போலீஸ் புகார் செய்து கடிதம் அனுப்பிய பிறகும் (ஆக்கிரமிப்பாளர் தரப்பிலிருந்து நடவடிக்கை இல்லை என்றால்) நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு முன், உள்ளூராட்சி மன்றம் (PBT) அல்லது மாவட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசிப்பதும் உதவியாக இருக்கும், ஏனெனில் நீதிமன்ற நடவடிக்கை என்பது கடைசி படியாகும்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.

இந்தச் சிக்கலை இணக்கமாகத் தீர்க்க சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். இருப்பினும், தங்கள் நிலம் ஆக்கிரமிக்கப்படும் போது நில உரிமையாளர்கள் அழுத்தத்தை எதிர் கொள்கிறார்கள் மற்றும் தங்கள் உரிமைகளைப் பெற கூடுதல் செலவுகளைச் சுமக்க வேண்டியுள்ளது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

"வன்முறையைப் பயன்படுத்தினால் அல்லது கும்பலைக் கூட்டினால், அது ஆக்கிரமிப்பாளர் தரப்பிற்கு அச்சுறுத்தலாக மாறும். அதனால் கலவரம் போன்ற நாம் விரும்பாத சம்பவங்கள் நடந்து, அது குற்றவியல் வழக்குகளுக்கு வழிவகுக்கும். எனவே, சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது போன்ற சரியான வழிமுறைகளைப் பயன்படுத்துவதே சிறந்தது," என்றார் அவர்.

நில ஆக்கிரமிப்பு வழக்குகள், சூழ்நிலை மற்றும் ஆதாரங்களைப் பொறுத்து உரிமையியல் அல்லது குற்றவியல் அம்சங்களைக் கொண்டிருக்கலாம் என்று ஸுல்ஷியாமி விளக்கினார்.

"குற்றவியல் வழக்காக இருந்தால், ஆதார நிரூபணச் சுமை அதிகமாக இருக்கும். ஆனால் உரிமையியல் வழக்காக இருந்தால், அது தெளிவானது. அனுமதியின்றி தங்குவது, வீடு கட்டுவது, கோயில் (வழிபாட்டுத் தலம்) கட்டுவது போன்றவை ஆக்கிரமிப்பில் அடங்கும். அவர் நீண்ட காலமாக அங்கு வசித்தாலும், அது 'ஸ்க்வாட்டர்' (அனுமதியின்றி குடியிருப்பவர்) என்றே கருதப்படும்."

"எனவே, வெளியேறக் கோரி 30 நாட்கள் அவகாசம் அளித்து கடிதம் அனுப்பியும் அவர் வெளியேறவில்லை என்றால், அவர் மீண்டும் நுழைவதைத் தடுக்க நிரந்தரத் தடை உத்தரவு அல்லது தடுப்பு உத்தரவுக்காக நீதிமன்றத்தை நாடலாம். நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன் போலீசாரும் ஒத்துழைப்பார்கள்."

"ஒவ்வொரு முறையும் அவர் உத்தரவை மீறும்போது, இழப்பீடு மற்றும் நட்டஈடு விதிக்கப் படலாம். இது நீதிமன்ற அவமதிப்பாகவும் கருதப்பட்டு, சிறைத்தண்டனை வரை செல்லக் கூடும்," என்று அவர் மேலும் கூறினார்.

அதேவேளையில், அமானா கட்சியின் இளைஞர் பிரிவின் கீழ் செயல்படும் 'கானுன் மூடா' தேசிய கிளஸ்டரின் பிரதிநிதியான அவர், அனுமதியின்றி வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட்டதால் நில ஆக்கிரமிப்பு சிக்கல்களை எதிர்கொள்ளும் எந்தவொரு நில உரிமையாளருக்கும் இலவச சட்ட சேவைகளை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

முன்னதாக, மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, நில ஆக்கிரமிப்பு மற்றும் அனுமதியின்றி வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படுவதைக் கண்டறியும் நில உரிமையாளர்கள் போலீஸ் புகார் செய்ய வேண்டும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு அறிவிப்புக் கடிதம் வழங்க வேண்டும் மற்றும் மாவட்ட அலுவலகம் மற்றும் மாவட்டப் பாதுகாப்பு செயற்குழுவிற்கு (JKD) தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் நீதிமன்ற நடவடிக்கைக்குச் செல்வதற்கு முன், நில உரிமையாளர், வழிபாட்டுத் தல நிர்வாகம், போலீஸ் மற்றும் உள்ளூராட்சி மன்றம் (PBT) உட்பட அனைத்து தரப்பினரையும் அழைத்து நியாயமான தீர்வைக் காண JKD ஒரு மத்தியஸ்தராகச் செயல்படும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619