காசநோய் சிகிச்சை ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் RM 800 உதவித்தொகை, டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் தகவல்.

18 பிப்ரவரி 2026, 4:37 AM
காசநோய் சிகிச்சை ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் RM 800 உதவித்தொகை,  டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் தகவல்.

ஷா ஆலாம், பிப் 18: நோயாளிகள் முழுமையாகக் குணமடையும் வரை RM800 உதவித்தொகை மூலம் காசநோய்க்கு (டிபி) சிகிச்சை அளிக்கும் முயற்சியை மாநில அரசாங்கம் தீவிரமாகத் தொடர்கிறது.

சிகிச்சை செலவுகளைச் சமாளிக்க நோயாளிகளுக்கு உதவும் நோக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட காசநோய் சிகிச்சை ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் இந்த உதவித்தொகை வழங்கப்படுவதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

"சில பகுதிகளில் காசநோய் தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், நோயைக் குணப்படுத்தும் திட்டத்தை சிலாங்கூர் அரசு தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது."

"தொற்று குணமாகும் வரை மருந்து போன்ற தேவைகளுக்கு இந்த RM800 உதவியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்," என அவர் முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, கடந்த ஆண்டு முழுவதும் 782 காசநோய் நோயாளிகள் மாநில அரசிடமிருந்து RM800 உதவித்தொகையைப் பெற்றதாக பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்திருந்தார்.

இந்த உதவித் திட்டம் தொடங்கப்பட்ட முதல் ஆண்டான 2024-இல் பதிவு செய்யப்பட்ட 765 நோயாளிகளுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.

இருப்பினும், இந்த அதிகரிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் அல்ல, மாறாக தகுதி வரம்புகள் மற்றும் உதவியை அணுகுவதற்கான விரிவான ஏற்பாடுகளே காரணம் என்று ஜமாலியா விளக்கினார்.

பதிவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் நான்கு தொற்றுநோயியல் வாரங்களில் (ME) சிலாங்கூரில் 424 காசநோய் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான 443 வழக்குகளுடன் ஒப்பிடுகையில் இது 19 வழக்குகள் குறைவாகும்.

அதே நேரத்தில், நான்கு தீவிர காசநோய் பரவல்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதார அலுவலகத்தால் (PKD) கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், அவை அனைத்தும் சிறிய அளவிலானவை மற்றும் முழுமையாகக் கட்டுப்பாட்டில் உள்ளன.

சமூகத்தில் பரவலான தொற்று எதுவும் இதுவரை பதிவாகவில்லை, இறப்புகளும் பதிவாகவில்லை.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619