செத்திய ஆலமில் வீட்டில் சிதைந்த நிலையில் இரு உடல்கள் கண்டெடுக்கப்பட்டன

9 பிப்ரவரி 2026, 4:58 AM
செத்திய ஆலமில் வீட்டில் சிதைந்த நிலையில் இரு உடல்கள் கண்டெடுக்கப்பட்டன

ஷா ஆலம், பிப் 9 - நேற்று, செத்தியா ஆலம், U13 இல் உள்ள வீடொன்றில் ஒரு பெண் மற்றும் ஓர் ஆணின் சிதைந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

“இரு உடல்களும் சிதைந்த நிலையில் இருந்தன, தடயவியல் முடிவுகளின் அடிப்படையில், இருவரும் இறந்து ஒரு வாரத்திற்கும் மேல் இருக்கும் என நம்பப்படுகிறது என ஷா ஆலம் காவல்துறைத் தலைவர் ஏசிபி ராம்சே எம்போல் தெரிவித்தார்.

“இருப்பினும், குறிப்பிட்ட வீட்டில் எந்தவொரு அசம்பாவிதங்களும் நடந்ததற்கான அறிகுறிகள் இல்லை. "உடல்களில் எந்த காயங்களும் இல்லை" என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அந்த இரு உடல்களும் ஷா ஆலம் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

இந்த வழக்கு திடீர் மரணமாக விசாரிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரியான பிரிவு 6 காவல்நிலையத் தலைமை ஆய்வாளர் இஸ்மான் முகமது இட்ரஸை 013-400 3355 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619