``Maju Usahawan MADANI 2025`` திட்டத்தின் வழி 2,257 தொழில்முனைவோர் பயன்

17 செப்டெம்பர் 2025, 8:51 AM
``Maju Usahawan MADANI 2025`` திட்டத்தின் வழி 2,257 தொழில்முனைவோர் பயன்

கோலாலம்பூர், செப் 17 - இதுவரை நாடு முழுவதும் 2,257 தொழில் முனைவோர், ``Maju Usahawan MADANI 2025`` திட்டத்தின் மூலம் பலனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் 1,674 பேர் பெண்கள் ஆவர். இதில் பெண்களின் பங்கேற்பு, ஆண்களை விட 3 மடங்கு அதிகமாக உள்ளதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் விவரித்தார்.

இத்திட்டத்தில் எதிர்காலத்தில் அதிக ஆண்கள் பங்கேற்பார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், இத்திட்டம், தொழில் வளர்ச்சிக்கான செலவுக் குறைப்பு யுக்திகள், டிஜிட்டல் உருமாற்றம், AI அதிநவீன தொழில்நுட்பப் பயன்பாடு போன்றவற்றை கற்றுக்கொடுக்கிறது. அதுமட்டுமில்லாம்ல், கடன் நிர்வகிப்பு, e-Invois மற்றும் ESG நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வையும் வழங்குகிறது.

சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன், அத்தொகுதியில் இத்திட்டத்தின் பயிற்சித் திட்டத்தை நிறைவுச் செய்து, பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கிய நிகழ்வில் இவ்வாறு கூறினார்.

இவ்வாண்டில் 3,000 தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தில் பங்கேற்பதை SME வங்கியின் துணை நிறுவனமான CEDAR, இலக்காகக் கொண்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619