ECONOMY

இயங்கலை விற்பனை பிரசார இயக்கத்தின் வாயிலாக மூன்று கோடி வெள்ளி வர்த்தகம்- டத்தோ தெங் தகவல்

4 டிசம்பர் 2020, 5:31 AM
இயங்கலை விற்பனை பிரசார இயக்கத்தின் வாயிலாக மூன்று கோடி வெள்ளி வர்த்தகம்- டத்தோ தெங் தகவல்

ஷா ஆலம், டிச 4- இ-பசார் 11.11 எனும் இயங்கலை வாயிலான விற்பனை பெருவிழாவின் வழி  மூன்று கோடி வெள்ளி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக முதலீட்டுத் துறைகளை ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்ட

வணிகர்கள் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு இத்திட்டம் துணை புரிவதாக அவர் சொன்னார்.

இயங்கலை வாயிலான வர்த்தகம் துரித வளர்ச்சி கண்டு வரும் துறையாக விளங்கு

வதோடு அதிக வருமானத்தையும் ஈட்டித் தருகிறது. ஆகவே, வணிகர்கள் இத்துறையில் ஈடுபட முனைப்பு காட்ட வேண்டும் என்றார் அவர்.

பொருளாதார மீட்சியை விரைவு படுத்துவதில் இலக்கவியல் முக்கிய பங்கை ஆற்றும்

என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் அத்துறையில் வணிகர்கள் அதிகளவில் ஈடுபடுவதை அரசு ஊக்குவிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

நேற்று இயங்கலை வாயிலாக நடைபெற்ற 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த இணைய

வர்த்தக விருதளிப்பு நிகழ்வில் அவர் இதனைக் கூறினர்.

இயங்கலை வாயிலாக லஸாடா மற்றும் ஷோப்பி ஆகிய நிறுவனங்களில் செய்யப்பட்ட வர்த்தக  உபரி மதிப்பு 70 கோடி வெள்ளியை எட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619