குவா மூசாங், மார்ச் 24: கோல கிராய்-குவா மூசாங் சாலையில், ரந்தாவ் மானிஸ் ஓய்வு மற்றும் சேவைப் பகுதியிலிருந்து (R&R) குவா மூசாங் நகரை நோக்கிச் செல்லும் வழியில் இன்று சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திற்குப் போக்குவரத்து மந்த நிலையில் காணப்பட்டது.
நோன்புப் பெருநாள் விடுமுறைக்குப் பிறகு தலைநகருக்குத் திரும்பும் மக்களின் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக இந்த நெரிசல் ஏற்பட்டதாகக் குவா மூசாங் மாவட்டக் காவல்துறை தலைவர், சூப்பிரின்டெண்டன்ட் சிக் சூன் ஃபூ கூறினார்.
"பயணிகள் அனைவரும் தங்கள் பயணங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய, சாலையில் பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
"போக்குவரத்து நெரிசலை மேலும் மோசமாக்கும் விபத்துகளில் சிக்குவதைத் தவிர்க்க, பொதுமக்கள் தங்கள் பயணங்களைத் திட்டமிட்டு, கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும்," என்றும் அவர் கூறினார்.
குவா மூசாங் - கோலா கிராய் சாலையில் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகன நெரிசல்
24 மார்ச் 2026, 9:37 AM
தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து என்ன?





