கோலாலம்பூர், 23 மார்ச்: மலேசியாவின் மோட்டோ 3 பந்தய வீரர் முஹம்மது ஹக்கீம் டேனிஷ் ரம்லி, பிரேசில் கிராண்ட் பிரிக்ஸ் (GP) போட்டியை 10 ஆம் இடத்தில் முடித்து, இவ்வாண்டு சீசனில் தொடர்ந்து நல்ல செயல்திறனை வெளிப்படுத்தினார்.
AEON Credit-MT Helmets-MSi அணியைச் சேர்ந்த அவர், நேற்று நடைபெற்ற தகுதிச் சுற்றில் சிறப்பாக விளையாடி, மூன்றாவது தொடக்க இடத்திலிருந்து பந்தயத்தைத் தொடங்கினார். ஆனால், 24 சுற்றுகளில் 15ஆம் சுற்றில் ஏற்பட்ட விபத்தால் பந்தயம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
முதலில் 24 வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில், அந்த விபத்திற்குப் பிறகு இறுதி ஐந்து சுற்றுகளுக்காக 12 வீரர்கள் மட்டுமே மீண்டும் பங்கேற்றனர்.இந்தப் போட்டியில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மாக்ஸிமோ க்விலெஸ், அர்ஜென்டினாவின் மார்கோ மொரெல்லியை 0.143 விநாடிகள் வித்தியாசத்தில் வென்று முதலிடம் பிடித்தார்.
மூன்றாவது இடத்தை இந்தோனேஷியாவின் வேதா பிரதாமா பெற்றார். அவர் சாம்பியனிடம் இருந்து 1.650 விநாடிகள் பின்தங்கி போட்டியை முடித்தார்.




