சிபு, 21 மார்ச்: பிந்துலு, கிடுரோங் பகுதியில் உள்ள சுங்காய் பிளான் லாட் அருவி பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது, ஒரு சிறுவன் மூழ்கி உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளார். அவருடன் இருந்த நண்பர் இன்னும் காணாமல் காணப் படவில்லை.
சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை (JBPM) வெளியிட்ட அறிக்கையில், 12 வயதான ட்ரிஸ்டன் மாரிஸ் மாரிஸா எர்னா என்பவரின் உடல் மாலை 5.20 மணியளவில் ஆற்றங்கரை-யிலிருந்து சுமார் ஐந்து மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப் பட்டதாக தெரிவித்துள்ளது.
இன்னும் காணாமல் போயிருப்பவர் 13 வயதான டாரன் டாகுன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.“இந்த சம்பவத்திற்கு முன்பு, இரு பாதிக்கப்பட்டவர்களும் மேலும் இரண்டு நண்பர்களுடன் (ஒருவர் 13 வயது சிறுவன் மற்றும் ஒருவர் 14 வயது சிறுமி) மதியம் 2 மணியளவில் அந்த அருவி பகுதியில் குளித்துக் கொண்டிருந்தனர்.
“இரு பாதிக்கப் பட்டவர்களும் கடைசியாக மதியம் 2.30 மணியளவில் காணப் பட்டதாக கூறப்படுகிறது, பின்னர் அவர்கள் மூழ்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சரவாக் JBPM மேலும் தெரிவித்ததாவது, அவசர அழைப்பு மாலை 3.22 மணியளவில் பெறப் பட்டதும், கிடுரோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒரு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப் பட்டது.




