ஃபைசல் ஹாலிம், தன் மீதான தாக்குதலுக்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது என்கிறர்.

22 மார்ச் 2026, 3:42 AM
ஃபைசல் ஹாலிம், தன் மீதான தாக்குதலுக்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது  என்கிறர்.

ஷா ஆலம், மார்ச் 21 — மைதானத்தில் மீண்டும் தனது விளையாட்டு திறன் உயர்ந்து வரும் நிலையில், முகம்மது ஃபைசல் அப்துல் ஹாலிம் தனது வாழ்க்கையை கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டு வந்த அமிலத் தாக்குதலுக்கு ஏன் தான் இலக்கானோம் என்ற கேள்வியால் இன்னும் வாடுகிறார்.சிலாங்கூர் எஃப்.சி. கேப்டன் கூறுகையில், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுக-ளுக்கு முன்பு நடந்த இந்தச் சோதனையை எதிர் கொண்ட அவர் இப்போது அமைதியாக இருந்தாலும், சம்பவத்தைச் சுற்றிய கேள்வி இன்னும் பதிலின்றியே உள்ளது.

“இந்தச் சோதனையை எதிர்கொண்ட நான், அமைதியாக உறுதியாக தோன்றினாலும், அதன் தாக்கம் ஒருபோதும் மறையாது. எனது உடல் மற்றும் முகத்தில் தழும்புகள் உள்ளன, அவை  இன்னும்  நினைவு படுத்துகின்றன.

.“இது எனக்கு ஏன் நடந்தது என்று நான் தொடர்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் கடந்தது கடந்துவிட்டது; இப்போது கால்பந்துக்கு மீண்டும் திரும்பி, நான் தொடர்ந்து போராட முடியும் என்பதை நிரூபிக்கும் நேரம் இது,” என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

ஹரிமாவ் மலாயா நட்சத்திரமும் சிலாங்கூர் எஃப்.சி. விங்கருமான ஃபைசல் ,’’மிக்கி’’ என்று அன்புடன் அழைக்கப்படுபவருமான அவர் தான் மற்றும் தனது குடும்பத்தினர் இன்னும் இந்தச் சம்பவத்தின் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

அதனால் தங்களது அன்றாட நடமாட்டத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.“நான் பெரும்பாலான நேரத்தை வீட்டிலோ, வேலையிலோ, பயிற்சியிலோ, மைதானத்திலோ அல்லது கிளப் நிகழ்ச்சிகளிலோ செலவிடுகிறேன். வேறு எங்காவது செல்ல வேண்டும் என்றால் கூட கவனமாக யோசிக்க வேண்டியுள்ளது.“வெளியே சென்றால், சுற்றுப்புறத்தை எப்போதும் உன்னிப்பாகக் கவனித்துக் கொள்ள வேண்டும்.

அலட்சியமாக இருக்க முடியாது; எந்தச் சாத்தியத்துக்கும் தயாராக இருக்க வேண்டும்,” என்றார். 2024 மே 5 அன்று, கோத்தா டாமான்சாராவில்  உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் அடையாளம் தெரியாத ஒருவரால் ஃபைசல் அமிலத் தாக்குதலுக்கு ஆளானார். இந்தச் சம்பவத்தின் விளைவாக கால்பந்து வீரர் நான்காம் நிலை தீக்காயங்களுக்கு ஆளானார்.

பல அறுவை சிகிச்சைகளுக்கும் உடலியக்க மருத்துவ (பிசியோதெரபி) சிகிச்சைக்கும் உட்பட வேண்டியிருந்தது.

டிரம்பின் அமைதி வாரியம் ஹமாஸுக்கு ஆயுதக் களைவு திட்டத்தை முன்வைக்கிறது

ஜெருசலேம், மார்ச் 21 — டொனால்ட் டிரம்பின் அமைதி வாரியம் ஹமாஸுக்கு அதன் ஆயுதங்களை எப்படிக் கீழே போடலாம் என்பது குறித்த எழுத்துப்பூர்வ திட்டத்தை முன் வைத்துள்ளது என்று இரண்டு வட்டாரங்கள் தெரிவித்தன.

இது அமெரிக்க அதிபர் காசாவின் எதிர்காலத் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில், பாலஸ்தீனிய போராளிகள் இதுவரை மறுத்து வரும் ஒரு நடவடிக்கையாகும்.

என்.பி.ஆர். முதலில் செய்தி வெளியிட்ட இந்தத் திட்டம், கடந்த வாரம் கெய்ரோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஹமாஸுக்கு சமர்ப்பிக்கப்பட்டது என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது. இந்தப் பேச்சுகளில் நிக்கோலாய் மிளாடெனோவ் மற்றும் அர்யே லைட்ஸ்டோன் ஆகியோர் கலந்து கொண்டதாக விவகாரத்தை அறிந்த  அவை இரண்டும் தெரிவித்தன.

மிளாடெனோவ் டிரம்ப் நியமித்த அமைதி வாரியத்தின் காசா தூதர் ஆவார். லைட்ஸ்டோன் டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்-க்கு உதவியாளராக உள்ளார். டிரம்பின் காசா திட்டத்தின்படி, இஸ்ரேல் படைகள் காசாவில் இருந்து வெளியேற வேண்டும். ஹமாஸ் தன் ஆயுதங்களை கீழே போடும் போது புனரமைப்புப் பணிகள் தொடங்க வேண்டும்.

இந்தத் திட்டத்துக்கு இஸ்ரேலும் ஹமாஸும் கடந்த அக்டோபரில் ஒப்புதல் அளித்துள்ளன. வியாழக்கிழமை மிளாடெனோவ் தெரிவித்தார்: போரால் புண்பட்ட காசாவுக்கு நிவாரணம் அளிக்கும் தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மத்தியஸ்தர்கள் ஒப்புக்கொண்ட ஒரு கட்டமைப்பு, பெரும்பாலும் இடிபாடுகளாக கிடக்கும் இந்தப் பகுதியில் புனரமைப்பை முன்னெடுக்க உதவும்.

“இப்போது இது மேசையில் உள்ளது. இது ஒரு தெளிவான தேர்வை வலியுறுத்துகிறது — ஹமாஸும் ஒவ்வொரு ஆயுதக் குழுவும் முழுமையாக ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். என்பதில் எந்த விதிவிலக்கும் இல்லை, எந்தப் பிரிவுக்கும் விலக்கு இல்லை. இந்த நம்பிக்கை காலத்தில், பாலஸ்தீன மக்களுக்கான சரியான தேர்வை எடுக்க பொறுப்புள்ளவர்கள் முன்வர வேண்டும்,” என்று அவர் ஈத் அல்-ஃபித்ர் பண்டிகையையொட்டி எக்ஸ் (முன்பு ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டார்.

சனிக்கிழமை, பண்டிகை  விடுமுறையின் இரண்டாவது நாளில் ஹமாஸ் பிரதிநிதிகள் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.

ஆயுதக் களைவு பேச்சுகள், பிப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்க-இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன.

அம்னெஸ்டி வழங்கப்படலாம்

அமெரிக்க அதிகாரிகள், ஈரான் ஆதரவு ஹமாஸ் உறுப்பினர்கள்  கனரக ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்ட லேசான ஆயுதங்களை கீழே போட ஒப்புக் கொண்டால்,  அவர்களுக்கு அம்னெஸ்டி (மன்னிப்பு) வழங்கப் படலாம் என தெரிவித்தனர். 

இருப்பினும் ஹமாஸுக்கு நெருக்கமான  வட்டாரங்கள், காசாவில் உள்ள போட்டி ஆயுதக் குழுக்களின் தாக்குதலுக்கு  இடையே  உள்ள கடுமையான பகைமை காரணமான, பயத்தினால் ஹமாஸ் தன் துப்பாக்கிகளை ஒப்படைக்க மறுக்கும்  என்கிறார்கள்.

ஒரு வட்டாரம், இஸ்ரேல் முழுமையான ஆயுதக் களைவை வலியுறுத்துவதால், இஸ்ரேலுக்கு ஏற்றதாக இருப்பதைப் பொறுத்தே பெரும்பாலான விஷயங்கள் அமையும் என    தெரிவித்தது. கடந்த சில மாதங்களாக ஹமாஸின் முக்கிய அதிகாரிகள் சிலர் ஆயுதக் களைவை முற்றிலும் நிராகரித்துள்ளனர்.

காசாவின் சுமார் பாதி பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இஸ்ரேல் படைகள் வெளியேறும் எந்த அறிகுறியையும் இஸ்ரேல் இன்னும் காட்ட வில்லை. மற்றொரு பாதியை ஹமாஸ் உறுதியாகப் பிடித்துள்ளது. இரண்டு ஆண்டுகால அழிவுகரமான போரால் இரண்டு மில்லியன் மக்கள் பெரும்பாலும் வீடில்லாமல் தவிக்கின்றனர்.

அம்னெஸ்டியும் காசாவில் இலக்கு வைத்த முதலீடுகளும் ஹமாஸுக்கு ஊக்கமாக வழங்கப் படுகின்றன. ஆனால் அமைதி வாரியத்திடம் இதற்கான நிதி இருக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என ஒரு வட்டாரம் தெரிவித்தது.

டிரம்ப் பிப்ரவரியில் வளைகுடா நாடுகள் உட்பட பல நாடுகளிடமிருந்து சுமார் 7 பில்லியன் அமெரிக்க டாலர் (RM27.58 பில்லியன்) நன்கொடை உறுதி மொழிகளைப் பெற்றார். ஆனால் அதே நாடுகள் விரிவடைந்த மத்திய கிழக்குப் போரில் ஈரானால் தாக்குதலுக்கு உள்ளாகின.

அந்த உறுதிமொழி நிதியில் மிகச் சிறிய தொகை மட்டுமே உண்மையில் வழங்கப் பட்டுள்ளது என்று அவ்வட்டாரம் தெரிவித்தது  ஆனால்  அது தொகையை குறிப்பிடவில்லை.

லைசென்ஸ் இன்றி செயல்பட்ட மசாஜ் நிலையங்களை MBSJ மூடியது – சுபாங் ஜெயா,

ஷா ஆலம், 21 மார்ச்: சுபாங் ஜெயா மாநகராட்சி (MBSJ), SS14, USJ 1 மற்றும் பூச்சோங் பகுதியில் உள்ள பண்டார் புத்ரி சுற்றுவட்டாரங்களில், உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்ட பல சுகாதார மற்றும் அழகு நிலையங்களை (மசாஜ் மையங்கள்) 14 மார்ச் அன்று நடைபெற்ற அமலாக்க நடவடிக்கையின் போது மூடியுள்ளது.
MBSJ வெளியிட்ட தகவலின்படி, ஆய்வின் போது அந்த நிலையங்கள் உள்ளூராட்சி அதிகாரிகளிடமிருந்து செல்லுபடியாகும் அனுமதி பெறாமல் வணிகச் செயல் பாடுகளை மேற்கொண்டது கண்டறியப்பட்டது.
“சட்ட அமலாக்க நடவடிக்கையாக, சம்பந்தப்பட்ட நிலையங்களில் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் அவை உடனடியாக மூடப் பட்டன,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், அனைத்து வணிக நிறுவனங்களும் சட்டங்களையும் விதிமுறைகளையும் கடைப் பிடிக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்த, கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்று MBSJ தெரிவித்துள்ளது.இந்த நடவடிக்கை, உள்ளூர் மக்கள் நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் முக்கியமானதாகும் என்று கூறப்பட்டது.
விதிமுறைகளை மீறும் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க விரும்பினால், MBSJ அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அல்லது சுபாங் ஜெயா கட்டுப்பாட்டு மையத்தை 03-80247700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619