குவாங் தாசிக் பீரு ஏரியில் ஒரு ஆணின் உடல் மிதந்த நிலையில் கண்டெடுப்பு

21 மார்ச் 2026, 8:55 AM
குவாங் தாசிக் பீரு ஏரியில் ஒரு ஆணின் உடல் மிதந்த நிலையில் கண்டெடுப்பு

கோலாலம்பூர், மார்ச் 21 — குவாங் தாசிக் பீரு ஏரியில் வியாழக்கிழமை (மார்ச் 19) காலையில் ஒரு ஆணின் உடல் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.சுங்கை புலோ காவல் நிலையத் தலைவர் சூப்பர் மொஹ்ட் ஹாஃபிஸ் மொஹம்மது நோர் தெரிவித்தார்.

காலை 8.03 மணியளவில் பொதுமக்களிடமி-ருந்து இந்தக் கண்டுபிடிப்பு தொடர்பான புகார் பெறப்பட்டது. உடல் சுமார் 170 சென்டிமீட்டர் உயரமானவர், வெளிறிய நிறமுடையவர், இடது தோளில் ‘Ship Floss’ என்ற டாட்டூ இருப்பவர்.அந்த ஆண் அடர் பழுப்பு நிற டி-ஷர்ட் (அதில் ‘Suppligae’ என்ற வார்த்தை பதிக்கப்பட்டிருந்தது.

நீல நிற ஜீன்ஸ் மற்றும் பச்சை நிற பட்டை கொண்ட சீக்கோ கைக்கடிகாரம் அணிந்திருந்தார்.“மேலும் பரிசோதனையில், இறந்தவரின் இடது கையில் பி.சி.ஜி. (Bacillus Calmette-Guérin) தடுப்பூசி தழும்பு இல்லை என்பது தெரியவந்தது,” என்று அவர் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த விவரங்களுடன் பொருந்தும் காணாமல் போன குடும்ப உறுப்பினர் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் அல்லது புகார் அளித்தவர்கள், விசாரணை அதிகாரி எஸ்.எம். ரோஸ்லி மொஹமட் நோரை 013-6095744 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619