கோத்தா கினபாலு: மத்திய அரசாங்கம் சமீபத்தில் செய்த அறிவிப்புக்கு ஏற்ப, இந்த ஆண்டு நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு சபா மாநில அரசாங்கமும் கூடுதல் பொது விடுமுறையை அறிவித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட சிறப்பு அரசாங்க அரசிதழின்படி, 1 ஷவ்வால் சனிக்கிழமை (மார்ச் 21) அன்று வந்தால், வெள்ளிக்கிழமை (மார்ச் 20) கூடுதல் பொது விடுமுறை தினமாக சபா யாங் டி பெர்துவா நெகிரி துன் மூசா அமான் நிர்ணயித்துள்ளார்.
ஒருவேளை, நோன்புப் பெருநாள் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) என அறிவிக்கப்பட்டால், மாநிலத்தின் கூடுதல் பொது விடுமுறை திங்கட்கிழமைக்கு (மார்ச் 23) மாற்றப்படும் என்றும் அந்த அரசிதழ் குறிப்பிடுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சபாவிற்கு வருகை மேற்கொண்டபோது, நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்களின் பயணங்களையும் திட்டங்களையும் எளிதாக்கும் நோக்கில் இதே தேதிகளில் கூடுதல் விடுமுறை வழங்கப்படும் எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பெருநாளை முன்னிட்டு சபாவில் கூடுதல் பொது விடுமுறை அறிவிப்பு
19 மார்ச் 2026, 8:37 AM
தொடர்புடைய செய்திகள்
national
காட்டுத்தீ பரவியதில் 700 பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகின
Shalini Rajamogun
16 மார்ச் 2026

national
சபாவில் வெள்ள நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது
Shalini Rajamogun
12 மார்ச் 2026

national
சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தது
Shalini Rajamogun
1 மார்ச் 2026

national
சபா மாநிலத்தின் 51 விளையாட்டு சங்கங்களுக்கு 3.1 மில்லியன் ரிங்கிட் மானியம் இவ்வாண்டு வழங்கப்பட்டது
Shalini Rajamogun
27 பிப்ரவரி 2026

உங்கள் கருத்து என்ன?


