கோலாலம்பூர்: சீனாவைச் சேர்ந்த Zeekr, XPeng மற்றும் MG Motor போன்ற பல மின்சார வாகன (EV) நிறுவனங்கள், முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட (CBU) மாடல்களுக்கான வரிச் சலுகைகள் மற்றும் ஊக்கத் தொகைகள் முடிவுக்கு வருவதைத் தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டில் உள்நாட்டில் வாகனங்களை ஒருங்கிணைக்கும் (CKD) நடவடிக்கைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளன.
உள்நாட்டில் ஒருங்கிணைக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு டிசம்பர் 31, 2027 வரை முழுமையான வரி விலக்கு தொடர்ந்து நடைமுறையில் இருப்பதை கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் வகுக்கப் பட்டுள்ளதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு (MITI) தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், CBU மின்சார வாகனங்களுக்கான அடிப்படை விலையை ரிம 100,000-இலிருந்து மீண்டும் அசல் விலையான ரிம 250,000-க்கு உயர்த்துவது, CBU இறக்குமதியிலிருந்து உள்நாட்டு உற்பத்திக்கு ஒரு தெளிவான மாற்றத்தை உறுதி செய்வதற்கும், தேசிய நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் விற்பனையாளர்களின் முதலீடுகளைப் பாதுகாப்பதற்கும் அவசியமான ஒரு நடவடிக்கையாகும் என்று அந்த அமைச்சு கூறியது.
"மேலும், உள்நாட்டு மின்சார வாகனச் சூழல் அமைப்பு தொடர்ந்து நிலையான வளர்ச்சியை அடையும். அத்துடன், நாட்டில் உயர் திறன் கொண்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்படும்," என்று அமைச்சு இன்று நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வமான பதிலில் குறிப்பிட்டது.
CBU மின்சார வாகனங்களின் அடிப்படை விலை நிர்ணயம் மற்றும் 2027-க்குள் மலேசியாவின் CKD சந்தையில் சீன EV நிறுவனங்களின் முதலீடு குறித்து செனட்டர் டத்தோ முஸ்தபா மூசா எழுப்பிய கேள்விக்கு MITI இவ்வாறு பதிலளித்தது.
சீனாவின் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் 2026-ஆம் ஆண்டில் உள்நாட்டில் வாகனங்களை ஒருங்கிணைக்கும் (CKD) நடவடிக்கைகளை தொடங்க திட்டமிட்டுள்ளன
11 மார்ச் 2026, 4:29 AM
தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து என்ன?






