கோலாலம்பூர், மார்ச் 3 –மலேசிய வானில் இன்று (செவ்வாய்க்கிழமை) சந்திர கிரகணம் நிகழவுள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இக்கிரகணத்தைக் காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.மலேசிய நேரப்படி, இக்கிரகணம் இன்று மாலை தொடங்கி இரவு வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான கால அட்டவணை பின்வருமாறு: கிரகண நேரங்கள் (மலேசிய நேரப்படி:
சந்திர கிரகணம் தொடக்கம் மாலை 4.41 மணிமுழு
கிரகண நிலை (Peak) இரவு 7.32 மணி
சந்திர கிரகணம் நிறைவு இரவு 10.24
மணிமலேசியாவில் மாலை 4.41 மணிக்கு கிரகணம் தொடங்கினாலும், சந்திரன் உதயமான பிறகே மக்கள் இதனை வெறும் கண்களால் தெளிவாகக் காண முடியும்.
குறிப்பாக, இரவு 7.32 மணியளவில் சந்திரன் முழுமையாக மறைக்கப்பட்டு, 'முழு சந்திர கிரகண' நிலையை எட்டும் போது வானில் ஒரு செந்நிறக் காட்சியைக் காண வாய்ப்புள்ளதாக வானியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இரவு 10.24 மணிக்கு கிரகணம் முழுமையாக நிறைவடையும். வானம் மேகமூட்டமின்றி தெளிவாக இருக்கும் பட்சத்தில், மலேசியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்த இயற்கை நிகழ்வை மக்கள் கண்டு ரசிக்கலாம்.சூரிய கிரகணத்தைப் போலன்றி, சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது பாதுகாப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.




