ஹரி ராயா பண்டிகை: பயணிகளின் நெரிசலைத் தவிர்க்க 26 கூடுதல் ரயில் சேவைகளை வழங்குகிறது KTMB

2 மார்ச் 2026, 6:51 AM
ஹரி ராயா பண்டிகை: பயணிகளின் நெரிசலைத் தவிர்க்க 26 கூடுதல் ரயில் சேவைகளை வழங்குகிறது KTMB

கோலாலம்பூர், மார்ச் 2: ஹரி ராயா கொண்டாட்டத்தை முன்னிட்டு, சொந்த நகரத்துக்கு  திரும்பும் பயணிகளின் அதிகப்படியான தேவையைப் பூர்த்தி செய்ய மார்ச் 17 முதல் 29 வரை 26 கூடுதல் ரயில் சேவைகளை வழங்கப்போவதாக KTMB அறிவித்துள்ளது. ஏற்கனவே உள்ள பயணச்சீட்டுகள் அனைத்தும் விற்றுத் தீரும் நிலையில் இருப்பதால், 18 மின்சார ரயில் சேவைகள் (ETS) மற்றும் எட்டு இஎம்யூபிளஸ் (EMUPlus) சேவைகள் இயக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 10 கூடுதல் ETS பயணங்களுக்கான விற்பனை நேற்று நண்பகல் முதல் தொடங்கியுள்ள நிலையில், மீதமுள்ள 16 பயணங்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

 

இந்தக் கூடுதல் சேவைகளின் மூலம் தினசரி 8,118 இடங்கள் வீதம், பண்டிகைக் காலத்தில் மொத்தம் 105,534 கூடுதல் இடங்கள் பயணிகளுக்குக் கிடைக்கும் என்று KTMB தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, ஹரி ராயா கொண்டாட்ட காலத்திற்காக 285,714 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன; இது நாளொன்றுக்கு சராசரியாக 70 பயணங்களையும் 21,978 இடங்களையும் உள்ளடக்கியது. இந்தக் கூடுதல் சேவைகளில் ஜேபி சென்ட்ரல்-கேஎல் சென்ட்ரல், ஈப்போ-கேஎல் சென்ட்ரல், பட்டர்வொர்த் மற்றும் பாடாங் பெசார் ஆகிய வழித்தடங்கள் அடங்கும்.

 

மேலும், கிழக்குக் கரைப் பகுதிகளுக்காக மார்ச் 18 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ELA சிறப்புச் சேவை இயக்கப்படவுள்ளது. இதற்கான கட்டணம் 80 முதல் 95 ரிங்கிட் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வடக்கு வழித்தடத்திற்கான சிறப்புச் சேவை மார்ச் 17 முதல் 23 வரை இயக்கப்பட்டு, ஒருவழிப் பயணத்திற்கு 70 ரிங்கிட் கட்டணமாக வசூலிக்கப்படும். பயணிகள் தங்களின் பயணச்சீட்டுகளை 'கிட்ஸ்' (KITS) செயலி, அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி இயந்திரங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். கடைசி நேர நெருக்கடியைத் தவிர்க்க முன்கூட்டியே திட்டமிடுமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619