லாரி மூலம் 300 கிலோ எடை கொண்ட நோயாளி மருத்துவமனைக்கு இடமாற்றம்

20 பிப்ரவரி 2026, 1:05 AM
லாரி மூலம் 300 கிலோ எடை கொண்ட நோயாளி மருத்துவமனைக்கு இடமாற்றம்

ஜெர்தே, பிப் 20: மலேசியப் பாதுகாப்புப் படையினர், 300 கிலோகிராமுக்கும் அதிக உடல் எடை கொண்ட நோயாளி ஒருவரை பெசுட் மருத்துவமனையிலிருந்து கோல திரங்கானுவில் உள்ள சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனைக்கு வெற்றிகரமாக மாற்றியுள்ளனர்.

 28 வயதுடைய அந்த இளைஞரின் உடல் பருமன் காரணமாக அவரை ஆம்புலன்ஸ் அல்லது சாதாரண வாகனங்களில் ஏற்றிச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது என்று பெசுட் மாவட்டப் பாதுகாப்பு அதிகாரி கேப்டன் முகமட் ஃபஸ்லியன் ஜாபர் தெரிவித்தார். இதன் விளைவாக, அவரை இடமாற்றம் செய்ய  மலேசிய சிவில் பாதுகாப்பு லாரியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது என்று அவர் தெரிவித்தார்.

 முன்னதாக, மயக்க நிலையில் இருந்த அந்த நோயாளியை மேல் சிகிச்சைக்காக  மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு மருத்துவமனை தரப்பிலிருந்து அவசர அழைப்பு வந்ததாக அவர் குறிப்பிட்டார். நேற்றுதான் அதே லாரியைப் பயன்படுத்தி அந்த இளைஞரை கம்போங் பாடாங் லுவாஸில் உள்ள அவரது வீட்டிலிருந்து பெசுட் மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததாகவும், தற்போது அவரது நிலை கருதி இடமாற்றம் செய்யப்படுவதாகவும் அவர் மேலும் விளக்கினார்.

 தனது தம்பியின் காலில் ஏற்பட்ட வீக்கத்தைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து அவரது உடல் எடை மிக வேகமாக அதிகரிக்கத் தொடங்கியதாக ஷஃபிக் கூறினார். தற்போது இரத்தத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளதால், மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் மயக்க நிலையில் வைக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக இடம் மாற்றப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619