உலு கிள்ளான், யூகே பெர்டானா வில் உள்ள கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச் சாலையின் (EKVE) உயர்த்தப்பட்ட யூ-திருப்ப பாதை திறக்கப் பட்டு விட்டது.

14 பிப்ரவரி 2026, 8:39 AM
உலு கிள்ளான், யூகே பெர்டானா வில் உள்ள கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச் சாலையின் (EKVE) உயர்த்தப்பட்ட யூ-திருப்ப பாதை திறக்கப் பட்டு விட்டது.

ஷா ஆலாம், பிப்ரவரி 14: உலு கிள்ளான், யூகே பெர்டானா வில் உள்ள கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச் சாலையின் (EKVE) உயர்த்தப்பட்ட யூ-திருப்ப பாதை, பொது மக்களுக்குத் திறக்கப்படுவதற்கு முன் சாலை பாதுகாப்பு தணிக்கைக்கு (RSA) உட்படுத்தப் பட்டு அங்கீகரிக்கப் பட்டது.

திறப்பு விழாவுக்கு சுமார் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பு தணிக்கைக் குழு அந்த இடத்தில் ஆய்வு செய்து, சில கூடுதல் நடவடிக்கைகளுடன் பாதையைத் திறக்க ஒப்புதல் அளித்ததாக புக்கிட் அந்தாராபங்சா  சட்டமன்ற உறுப்பினர் முகமட் கம்ரி கமாருடின் கூறினார்."வேக வரம்புகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் போன்ற கூடுதல் நடவடிக்கைகளை திறப்பதற்கு முன்பே அது அங்கீகரிக்கப் பட்டது," என்று அவர் கூறினார்.

மேலும், இந்த வடிவமைப்பு நெடுஞ்சாலை செயல் பாட்டு நடைமுறைகளுக்கு இயங்குவதாகவும் அவர் ஸ்டார் மெட்ரோவிடம் தெரிவித்தார். ஜனவரி 26-ஆம் தேதி இந்த உயர்த்தப் பட்ட யூ-திருப்ப பாதை திறக்கப் பட்டது, ஜாலான் யூகேய் பெர்டானா மற்றும் மத்திய வட்டச் சாலை 2 (MRR2) சந்திப்பில் உச்ச நேரப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவி உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

புக்கிட் அந்தாரா பங்சாவில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் வழியாக வாகனங்கள் குறுக்கே செல்வது நின்று விட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து நேர்மறையான மாற்றத்தைக் காட்டியுள்ளது என்று முகமட் கம்ரி கூறினார்.

"இந்த நிலைமை ஜாலான் வங்சா 1-இல் போக்குவரத்தை  சுமூகமாக்க உதவுகிறது," என்று அவர் மேலும் கூறினார்.இருப்பினும், திறக்கப்பட்டது முதல் சில நாட்களில் நடந்த விபத்துக்கள் உட்பட பயனர்கள் எழுப்பிய கவலைகள் இருப்பதை அவர் ஒப்புக் கொண்டார்.

அந்தப் பாதை இன்னும் புதியது என்றும், பயனர்கள் பழகுவதற்கு சிறிது காலம் ஆகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.இதற்கிடையில், கோம்பாக் மற்றும் தாமான் கெராமட் நோக்கி இரண்டு வழித்தடங்களாகப் பிரியும் கூர்மையான வளைவின் வடிவமைப்பு குறித்து சில குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்தனர்.

வளைவுப் பகுதியில் வழித்தடங்களை மாற்றுவதற்கான இடம் குறைவாக இருப்பதால், யூ-திருப்பத்தில் நுழைவதற்கு முன்பு ஓட்டுநர்கள் முன்கூட்டியே முடிவெடுக்க வேண்டும் என்று யூகேய் பெர்டானா குடியிருப்பாளர் ரோஸ்லி ஷரஃபுடின் கூறினார். "பரிந்துரைக்கப்பட்ட வேக வரம்பு மணிக்கு 25 கிலோமீட்டர், ஆனால் வளைவு மிகவும் கூர்மையாக இருப்பதால் நான் மெதுவாக செல்கிறேன்," என்றார் அவர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சட்ட நடவடிக்கையை தொடர்ந்து, இந்த உயர்த்தப் பட்ட யூ-திருப்பத்தின் அசல் வடிவமைப்பு திருத்தப் பட்டது என அறியப்படுகிறது.மேலும் கருத்துரைத்த முகமட் கம்ரி, தேவைப்பட்டால் பாதுகாப்பு மேம்பாடுகளின் அவசியத்தை மதிப்பிடுவதற்கு தற்போதைய நிலையை தொடர்ந்து கண்காணிப்பதாகக் கூறினார்.

கோம்பாக் மற்றும் லெம்பா கிராமட்/வங்சா மாஜுவை நோக்கிய தற்போதைய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், போக்குவரத்தை மேம்படுத்தும் இந்த பாதை திறக்கப் பட்டதாக EKVE சலுகையாளர் தெரிவித்தார். EKVE-யின் பிரிவு 1, 16.8 கிலோமீட்டர் பிரதான பாதையையும், 8.4 கிலோமீட்டர் அணுகு சாலைகளையும் கொண்டுள்ளது.

இதில் சுங்கை லோங், பண்டார் மக்கோத்தா செராஸ், உலு லங்காட் மற்றும் அம்பாங் ஆகிய நான்கு மேம்பால சந்திப்புகள் கோலாலம்பூர் வெளி வட்டச் சாலையின் (KLORR) ஒரு பகுதியாக உள்ளன. அதே வேளையில், யூகேய்-பெர்டானாவை நேரடியாக இணைக்கும் பிரிவு 2 இன்னும் கட்டுமானத்தில் உள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619