கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா: மாண்புமிகு பாப்பா ராய்டு வீரமான் கலந்து சிறப்பித்தார்

1 பிப்ரவரி 2026, 8:15 AM
கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா: மாண்புமிகு பாப்பா ராய்டு வீரமான் கலந்து சிறப்பித்தார்

கோல சிலாங்கூர், பிப் 1 – சிலாங்கூர், கோல சிலாங்கூரில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் இன்று காலை 8.30 மணியளவில் தைப்பூசத் திருவிழா பக்திப் பரவசத்துடனும் மிகுந்த ஒழுக்கத்துடனும் கொண்டாடப்பட்டது.​ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே ஆலயத்தில் திரண்டு தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்தியதுடன், பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்.

இவ்வாண்டு தைப்பூசக் கொண்டாட்டங்கள் மிகுந்த அமைதியுடனும், சமய நெறிமுறை-களுக்கு உட்பட்டும் நடைபெற்றதாக அவதானிக்கப் பட்டது.

இந்த விழாவில் சிறப்பு வருகையாளராகக் கலந்துகொண்டு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் (EXCO), மாநில அரசின் சார்பில் LIMAS (இஸ்லாம்  அல்லாத விவகாரங்களுக்கான குழு) திட்டத்தின் கீழ் நிதியுதவிகளை வழங்கினார். கோல சிலாங்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு ஆலயங்களுக்குப் பராமரிப்புப் பணிகள் மற்றும் சமூகச் செயல் பாடுகளுக்காக இந்த நிதி வழங்கப்பட்டது. ​இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் வசதி வாய்ப்புகளை மேம்படுத்தவும், அங்குள்ள மக்கள் வசதியாக வழிபாடுகளை மேற்கொள்ள-வும் சிலாங்கூர் அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

அதன் ஒரு பகுதியாகவே இந்த நிதியுதவி வழங்கப் பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.​மேலும், தைப்பூசக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அதிர்ஷ்டக் குலுக்கல் நிகழ்வுகளும் நடத்தப்பட்டன. இது உள்ளூர் மக்களிடையே குதுகலத்தையும் ஆர்வத்தையும் வழங்கியது.

அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்வுகள் நல்லுறவையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நோக்கில் அமைந்திருந்தது.​இந்த நிகழ்வில்  முக்கிம்  ஜெராம்   பெங்குலு (Penghulu Mukim Jeram) டோக் ரிசான் (Tok Rizan), ஆலய நிர்வாகத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தைப்பூசத் திருவிழா எவ்வித இடையூறுமின்றி மிகச் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதி செய்த அனைத்துத் தரப்பினருக்கும் மாநில அரசு தனது நன்றி மற்றும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619