ரிங்கிட் மூன்றாவது நாளாக ஏற்றம்; அமெரிக்க டாலருக்கு எதிராக 3.9175 இல் முடிவு

29 ஜனவரி 2026, 1:39 AM
ரிங்கிட் மூன்றாவது நாளாக ஏற்றம்; அமெரிக்க டாலருக்கு எதிராக 3.9175 இல் முடிவு

கோலாலம்பூர், ஜனவரி 28 — ரிங்கிட் புதன்கிழமை ஏழு ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டி, அமெரிக்க டாலருக்கு எதிராக 3.9175 இல் முடிவடைந்தது. மேம்பட்ட ஆபத்து உணர்வு மற்றும் பலவீனமடைந்த அமெரிக்க டாலர் ஆகியவை உள்ளூர் நாணயத்தைத் தொடர்ந்து ஆதரித்ததால், இந்த வாரம் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக ரிங்கிட் ஏற்றம் கண்டது.

மாலை 6 மணிக்கு, ரிங்கிட் செவ்வாய்க்கிழமை முடிவான 3.9500/9555 இலிருந்து 3.9175/9235 ஆக உயர்ந்தது. இது ஏப்ரல் 2018 இல் 3.9150 ஐ எட்டியதிலிருந்து வலுவான முடிவு நிலை ஆகும்.

கடந்த ஆண்டு இதே நேரத்துடன் ஒப்பிடுகையில், ரிங்கிட் அமெரிக்க டாலருக்கு எதிராக 10.77 விழுக்காடு உயர்ந்துள்ளது.

பாங்க் முவாமாலட் மலேசியா பிஎச்டி தலைமைப் பொருளாதார நிபுணர் முகமட் அஃப்ஸானிசாம் அப்துல் ரஷீட் கூறுகையில், அமெரிக்கப் பொருளாதாரத்தில் சமீபத்திய மிதமான அறிகுறிகளுக்குப் பிறகு அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் மிகவும் தளர்வான கொள்கை நிலைப் பாட்டை ஏற்கலாம் என்ற எதிர்பார்ப்பு வளர்ந்து வருவதால் ரிங்கிட்டின் ஏற்றம் ஆதரவு பெற்றுள்ளது.

“அமெரிக்கப் பொருளாதாரக் குறியீடுகள் பலவீனமடைந்துள்ளன, குறிப்பாக ஜனவரி நுகர்வோர் நம்பிக்கை தரவு, இன்றிரவு நடைபெற இருக்கும் அமெரிக்கத் திறந்த சந்தை குழுக் கூட்டத்தில் மிகவும் மென்மையான (dovish) கொள்கைத் தொனியை வழங்கலாம் என்ற எதிர்பார்ப்பை வலுப்படுத்தியுள்ளது.

“இது வளர்ந்து வரும் சந்தை நாணயங்களான ரிங்கிட் உள்ளிட்டவை குறுகிய காலத்தில் மேலும் வலுவடைய வாய்ப்பளிக்கும்,” என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

அஃப்ஸானிசாம் மேலும் கூறுகையில், அமெரிக்க டாலர் இன்டெக்ஸ் 0.93 விழுக்காடு சரிந்து 96.026 புள்ளிகளாகக் குறைந்தது, அமெரிக்க நாணயக் கொள்கை எதிர் பார்ப்புகளில் மாற்றம் காரணமாக அமெரிக்க டாலரின் தொடர்ச்சியான பலவீனத்தைப் பிரதிபலிப்பதாகவும் ரிங்கிட்டின் மதிப்பு உயர்வுக்கு இதுவும் காரணம் என்றார்.

பிற முக்கிய நாணயங்களுக்கு எதிராகவும் ரிங்கிட் வலுவடைந்தது: பிரிட்டிஷ் பவுனுக்கு எதிராக 5.4103/4178 இலிருந்து 5.4011/4093 ஆக, யூரோவுக்கு எதிராக 4.6958/7023 இலிருந்து 4.6955/7027 ஆக, ஜப்பானிய யென்னுக்கு எதிராக 2.5691/5730 இலிருந்து 2.5652/5692 ஆக உயர்வு கண்டது.

சிங்கப்பூர் டாலருக்கு எதிராக 3.1174/1219 இலிருந்து 3.1072/1122 ஆக, தாய் பாட்டுக்கு எதிராக 12.7247/7478 இலிருந்து 12.6135/6389 ஆக, இந்தோனேசியா ரூபியாவுக்கு எதிராக 235.5/236.0 இலிருந்து 234.2/234.7 ஆக, பிலிப்பைன்ஸ் பெசோ வுக்கு எதிராக 6.68/6.70 இலிருந்து 6.67/6.68 ஆக வலுவடைந்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619