மருத்துவ சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் பொதுவெளியில் தோன்றினார்

28 ஜனவரி 2026, 9:09 AM
மருத்துவ சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் பொதுவெளியில் தோன்றினார்

கோலாலம்பூர், ஜன 28 - கடந்த 22 நாட்களாக தேசிய இருதய நிறுவனத்தில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த 100 வயதான முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், முதல் முறையாகப் பொதுவெளியில் தோன்றினார்.

அவர் டாமன் சாரா, பெவிலியன் வணிக வளாகத்தில் உள்ள cafe இல், சக்கர நாற்காலியில் அமர்ந்து சுமார் 40 நிமிடங்கள் செலவழித்தார். அவருடன் அவரது மனைவி துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமட் அலி, IJN தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மருத்துவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

இதற்கிடையில், அவரது உடல்நிலை மீட்பில் ஒரு முக்கிய முன்னேற்றமாக, மருத்துவர்களின் கண்காணிப்புடன் அவர் வெளியே நேரம் செலவழித்ததாக கருதப்படுகிறது.

இருப்பினும், அவர் இன்னும் முழுமையாக குணமடையாததால், வீட்டிற்கு திரும்ப அனுமதிக்கப்படவில்லை, மாறாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைச் சந்திக்கும் அனுமதி, நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619