SSIPR அமைப்பு தற்போது மேம்படுத்தப்பட்டு, AKSES முறைக்கு மாற்றப்பட்டுள்ளது

2 ஜனவரி 2026, 2:38 AM
SSIPR அமைப்பு தற்போது மேம்படுத்தப்பட்டு, AKSES முறைக்கு மாற்றப்பட்டுள்ளது

ஷா ஆலம், ஜன 2: ஸ்மார்ட் இனிசியேட்டிவ் பெடுலி ரக்யாட் (SSIPR) அமைப்பு தற்போது மேம்படுத்தப்பட்டு, புதிய தோற்றத்துடன் சிஸ்டம் அப்ளிகேஷன் கித்தா சிலாங்கூர் செப்பாடு (AKSES) என மாற்றப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 2026 முதல் சிலாங்கூர் மக்கள் இம்முறையை அணுகி, ``Program Iltizam KitaSelangor Penyayang`` தொடர்பான சமீபத்திய தகவல்களைப் பெறலாம் என சிலாங்கூர் மாநில அரசின் செயலாளர் அலுவலகம் (SUK) தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், 29 டிசம்பர் 2025 முதல் தகுதியுள்ள சிலாங்கூர் மக்கள் இலவச நீர் திட்டத்திற்கான (SADE) விண்ணப்பத்தை AKSES அமைப்பின் மூலம் இணையம் வழி மேற்கொள்ளலாம்.

புதிய SADE விண்ணப்பங்கள் கட்டாயமாக AKSES அமைப்பின் வழியே செய்யப்பட வேண்டும். இனி SSIPR முறை அல்லது கையேடு (மனுவல்) படிவங்கள் மூலம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

எனினும், இதற்கு முன் செய்யப்பட்ட SADE விண்ணப்பங்கள் வழக்கம்போல தொடரும்.

தற்போதைய SADE பயனாளர்களுக்கு, முதல் 20 கன மீட்டர் (meter padu) நீருக்கான கழிவு, புதிய விண்ணப்பம் செய்யாமல் தொடர்ந்து வழங்கப்படும்.

ஆனால், தற்போதைய பயனாளர்கள் AKSES அமைப்பில், முகவரி அல்லது நீர் பில் விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களில் மாற்றம் இருந்தால் அவற்றை புதுப்பிக்க வேண்டும்.

SADE பெறுவதை ரத்து செய்வதும் AKSES அமைப்பின் மூலம் நேரடியாக செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு https://akses.selangor.gov.my/ என்ற அகப்பகத்தை நாடவும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619