உதவி திட்டங்கள் தொடர்பான தவறான புரிதல்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் - அதிகாரப்பூர்வத் தளங்களை நாட பொதுமக்களுக்கு அறிவுறுத்து

29 டிசம்பர் 2025, 5:39 AM
உதவி திட்டங்கள் தொடர்பான தவறான புரிதல்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் -   அதிகாரப்பூர்வத் தளங்களை நாட பொதுமக்களுக்கு அறிவுறுத்து

ஷா ஆலம், டிச 29: உதவி திட்டங்கள் தொடர்பான தகவல்களைப் பரப்புவதற்கு முன்பு, குழப்பத்தைத் தவிர்க்க, மாநில சட்டமன்ற உறுப்பினர் சேவை மையம் (ADN) அல்லது அதிகாரப்பூர்வத் தளங்களை நாடுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஸ்கிம் மெஸ்ர ஊசிய எமாஸ் (SMUE) தொடர்பான ஒருவரின் தவறான புரிதலைத் தொடர்ந்து, RM150 மதிப்புள்ள வவுச்சரை 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் கோரலாம் என குழப்பம் ஏற்பட்டதாக ஸ்ரீ கெம்பங்கான் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியூ கி கூறினார்.

பின்னர் தவறான புரிதல் வாட்ஸ்அப் மற்றும் முகநூல்களில் ஸ்கிரீன் ஷாட்கள் மூலம் பரப்பப்பட்டது. இதனால் பல குடியிருப்பாளர்கள் வவுச்சர்களைப் பெற சேவை மையத்திற்கு வந்தனர் என அவர் மீடியா சிலாங்கூரிடம் பகிர்ந்து கொண்டார்.

இது தொடர்பாக, சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதை நிறுத்திவிட்டு, சேவை மையம் அல்லது சட்டமன்ற உறுப்பினர்களின் அதிகாரப்பூர்வ முகநூல் உட்பட அதிகாரப்பூர்வத் தளங்களிலிருந்து நேரடியாக விளக்கம் பெறுமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

ஸ்கிம் மெஸ்ர ஊசிய எமாஸ் திட்டம் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மட்டுமே திறந்திருக்கும் மற்றும் சிலாங்கூரில் பிறந்த மாற்றுத்திறனாளிகளுக்கு (OKU) வயது வரம்பு இல்லாமல் ஸ்கிம் மெஸ்ர இன்சான் சிலாங்கூர் (SMIS) திட்டம் மூலம் உதவி வழங்கப்படும் என்று சியூ கி விளக்கினார்.

பதிவுசெய்யப்பட்ட SMUE மற்றும் SMIS உறுப்பினர்கள் தங்கள் பிறந்த மாதத்தில் வருடத்திற்கு RM150 மதிப்புள்ள பிறந்தநாள் வவுச்சரைப் பெற தகுதியுடையவர்கள்.

தவறான புரிதல்கள், சேவை மையங்களில் நெரிசல் ஆகியவற்றைத் தவிர்க்கவும், உதவி தகுதியான குழுவைச் சென்றடைவதை உறுதி செய்யவும், முன்கூட்டியே உறுதிப்படுத்தும் நடவடிக்கை முக்கியம் என அவர் நினைவுபடுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619