ஜனவரியில் அரசாங்க ஊழியர்களுக்கான புதிய சம்பள உயர்வு

12 டிசம்பர் 2025, 4:11 AM
ஜனவரியில் அரசாங்க ஊழியர்களுக்கான புதிய சம்பள உயர்வு

கோலாலம்பூர், டிசம்பர்.12- பொதுச் சேவை துறையில் SSPA எனப்படும் பணி ஓய்வு முறையைத் தேர்வு செய்த அரசாங்க ஊழியர்கள், அவற்றின் சம்பளத் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட புதிய சம்பள உயர்வைப் பெற விருக்கின்றனர்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சம்பள நாளான 22 ஆம் தேதி இந்தச் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பள உயர்வானது, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி பெற்ற ஆகக் கடைசிச் சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு, கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று பொதுச் சேவை இலாகாவின் சம்பளம் மற்றும் அலவன்ஸ் தொகை பிரிவின் சம்பளக் கொள்கை துணை இயக்குநர் முகமட் ஷாஹிர் ஷாரி தெரிவித்துள்ளார்.

ஜனவரி முதல் தேதியிலிருந்து புதிய சம்பள முறை அமலுக்கு வந்த போதிலும் ஜனவரி 22 ஆம் தேதி சம்பள நாளன்று இந்தச் சம்பள உயர்வு வழங்கப்பட்டு விடும் என்று அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619