ரேபிட் ‘On-Demand’: அனைத்து மண்டலங்களும் ஒரே செயலியில்

22 அக்டோபர் 2025, 9:19 AM
ரேபிட் ‘On-Demand’: அனைத்து மண்டலங்களும் ஒரே செயலியில்

ஷா ஆலம், அக்டோபர் 22: அடுத்த மாதம் முதல் ரேபிட் கேஎல் பயனர்களுக்கு பயண அனுபவம் ‘On-Demand’ சேவையின் மூலம் எளிதாக அமைய உள்ளது. இந்த முயற்சியில் மூன்று செயலிகள் Mobi, Trek Rides மற்றும் Kummute ஒன்றிணைக்கப்பட்டு புதிய ரேபிட் On-Demand என்ற ஒரே செயலியாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனால் முன்பதிவு செயல்முறை எளிதாகி, பயனர்களின் வசதியும் உயர்த்தப்படுகிறது.

இந்த ஒருங்கிணைந்த செயலி மூலம் பயனர்கள் இனி இடத்துக்குகேற்ப தனித்தனியாக செயலிகளைப் பதிவிறக்கத் தேவையில்லை என்று ரேபிட் பஸ் நிறுவனத்தின் செயல் தலைமை அதிகாரி கு ஜமீல் ஜகாரியா தெரிவித்தார். இது குழப்பத்தை குறைத்து பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் என்றார்.

ஒருங்கிணைப்பு திட்டத்தின் முதல் கட்டம் நவம்பர் 1 அன்று தொடங்கும். இதில் Mobi மற்றும் Trek Rides பயன்படுத்திய பகுதிகள் அடங்கும். இரண்டாம் கட்டம் நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் Kummute பயன்பாட்டு பகுதிகளையும் உள்ளடக்கும்.

அத்துடன், ரேபிட் கேஎல் நிறுவனம் 12 புதிய இணைந்த மண்டலங்களை (zones) அறிமுகப்படுத்தி, மொத்தம் 50 வேன்கள் மூலம் சேவையை விரிவுபடுத்துகிறது. இதில் மௌண்ட் கியாரா, தாமான் TAR, கிளானா ஜெயா, சுபாங் ஜெயா மற்றும் பூச்சோங் ஜெயா போன்ற முக்கிய இடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த விரிவாக்கம் பல்வேறு பகுதிகளுக்கிடையேயான இணைப்பை மேம்படுத்துவதோடு, பயனர்கள் சேவை மாற்றமின்றி அதிக இடங்களுக்கு பயணிக்க உதவும். இதனால் பொதுப் போக்குவரத்து மேலும் பயனருக்கு ஏற்ற தேர்வாக மாறும் என்றார்.

ரேபிட் On-Demand செயலியை Google Play Store மற்றும் Apple App Store-இல் இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619