ECONOMY

போலீசாருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி-  இரு சகோதரர்கள் கைது

29 ஜூன் 2022, 4:26 AM
போலீசாருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி-  இரு சகோதரர்கள் கைது

ஷா ஆலம், ஜூன் 29 -  போலீசாருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் மதுபானக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் இரண்டு உடன்பிறப்புகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கைது செய்தது.

நேற்று காலை 10.00 மணியளவில் காவல் துறை மற்றும் எம்.ஏ.சி.சி. மேற்கொண்ட நடவடிக்கையில் 40 வயதுடைய இரு  சந்தேக நபர்களும் கோலாலம்பூரில் உள்ள அவர்களது வணிக வளாகத்தில் கைது செய்யப்பட்டனர்.

வரி செலுத்தப்படாத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக நம்பப்படும் சந்தேக நபர்கள் இருவரும்  1967 ஆம் ஆண்டு சுங்கத் துறை சட்டத்தின்  135 (1) (இ) பிரிவின்  கீழ் தங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமலிருப்பதற்காக அந்த உயர் போலீஸ்  அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அவ்விரு சகோதரர்களும் கைது செய்யப்பட்டதை சிலாங்கூர் எம்.ஏ.சி.சி. இயக்குநர் டத்தோ அலியாஸ் சலீம்  உறுதிப்படுத்தினார். மேலும் இந்த வழக்கு 2009 ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் பிரிவு 17 (பி) இன் கீழ் விசாரிக்கப்படுவதாக அவர் சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619