அமலாக்க நடவடிக்கைகளைத் தவிர்க்க காலக்கெடுவுக்கு முன் வருமான வரியைச் செலுத்துங்கள்

24 பிப்ரவரி 2026, 6:26 AM
அமலாக்க நடவடிக்கைகளைத் தவிர்க்க காலக்கெடுவுக்கு முன் வருமான வரியைச் செலுத்துங்கள்

கோலாலம்பூர், பிப் 24: அபராதங்கள் மற்றும் அமலாக்க நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக, வருமான வரி செலுத்துவோர் காலக்கெடுவுக்கு முன்பே மின்னணு வரியைத் தாக்கல் (e-Filing) செய்து வரியைச் செலுத்த வேண்டும் என உள்நாட்டு வருவாய் வாரியம் (LHDN) நினைவூட்டியுள்ளது.

2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான e-Filing சமர்ப்பிப்பு மார்ச் 1, 2026 முதல் தொடங்கும். எனவே, வரி செலுத்துவோர் முன்கூட்டியே தயாராகி, தேவையான ஆதார ஆவணங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்று LHDN சேவைத் துறை அதிகாரி நோர் அசுரின் இஸ்மாயில் தெரிவித்தார்.

“e-Filing ஆவணங்களைத் தயார் செய்து, மார்ச் 1, 2026 முதல் சமர்ப்பிக்கவும்; கட்டணங்களையும் காலக்கெடுவுக்குள் செலுத்தவும் வேண்டும்.

அதுமட்டுமில்லாமல், ஆவண மோசடிகளைத் தவிர்க்க வேண்டும். ஆய்வில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிக அபராதம் விதிக்கப்படும். கட்டணம் செலுத்தத் தவறினால், பயணத் தடைகள் அல்லது பிற சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்,” என அவர் பெர்னாமா வானொலிக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறினார்.

2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வரியில் சில வரிவிலக்குகள் உயர்த்தப்பட்டுள்ளன:

  • மாற்றுத்திறனாளி (OKU) குழந்தைகளுக்கான வரிவிலக்கு RM6,000 இலிருந்து RM8,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

  • விளையாட்டு வாழ்க்கை முறைக்கான (sports lifestyle) வரிவிலக்கு RM500 இலிருந்து RM1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டு வரிவிலக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குதல், விளையாட்டு வளாக நுழைவுக் கட்டணம், போட்டிகளில் பங்கேற்புக் கட்டணம் மற்றும் உடற்பயிற்சி கூட (gymnasium) உறுப்பினர் கட்டணம் உள்ளிட்டவற்றை உள்ளடக்குகிறது. இது துணையார், குழந்தைகள் மற்றும் பெற்றோரின் பயன்பாட்டிற்கும் பொருந்தும் என நோர் அசுரின் குறிப்பிட்டார்.

மேலும், மருத்துவச் செலவுக்கான வரிவிலக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பெற்றோர் மற்றும் மலேசியாவில் வசிக்கும் தாத்தா-பாட்டி உட்பட ஆண்டுக்கு அதிகபட்சம் RM8,000 வரை வரிவிலக்கு வழங்கப்படும்.

“குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் மருத்துவச் சிகிச்சை, பல் சிகிச்சை, முழுமையான உடல் பரிசோதனை, தடுப்பூசி செலவுகள் மற்றும் பராமரிப்பாளர் செலவுகள் ஆகியவை இதில் அடங்கும்,” என அவர் கூறினார்.

சரியான வரிவிலக்கு மற்றும் தள்ளுபடிகளைப் பயன்படுத்தி தவறான கோரிக்கைகளைத் தவிர்க்க, LHDN அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள General Ruling 7/2025-ஐ பார்க்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

“உங்கள் வரி என்பது நமது எதிர்காலம்,” என அவர் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619