சீனப் புத்தாண்டை முன்னிட்டு பிப்ரவரி 21 வரை பண்டிகைக் கால அதிகபட்ச விலை திட்டம் அமல்

13 பிப்ரவரி 2026, 7:33 AM
சீனப் புத்தாண்டை முன்னிட்டு பிப்ரவரி 21 வரை பண்டிகைக் கால அதிகபட்ச விலை திட்டம் அமல்
சீனப் புத்தாண்டை முன்னிட்டு பிப்ரவரி 21 வரை பண்டிகைக் கால அதிகபட்ச விலை திட்டம் அமல்

ஷா ஆலம், பிப். 13: சீனப் புத்தாண்டு 2026-ஐ முன்னிட்டு அமல்படுத்தப்படும் பண்டிகைக் கால அதிகபட்ச விலைத் திட்டம் (SHMMP) இன்று முதல் பிப்ரவரி 21 வரை நடைமுறையில் இருக்கும் நிலையில், பயனர்கள் 15 வகையான அத்தியாவசியப் பொருட்களைக் கட்டுப்படுத்தப்பட்ட விலையில் பெறலாம்.

பிப்ரவரி 3 முதல் 19 வரை மாநிலம் முழுவதும் 182 இடங்களில் நடைபெறும் ரஹ்மா மடாணி விற்பனைத் திட்டம் (PJRM) மூலம் பயனர்கள் 30 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம் என சிலாங்கூர் உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சு (KPDN) தெரிவித்தது.

“SHMMP அமலாக்கத்தின் முதல் நாளான இன்று, கிள்ளான், புக்கிட் திங்கியில் உள்ள ஜெயன்ட் சூப்பர் மார்க்கெட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நுகர்வோர் விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயில், சிலாங்கூர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்வாதாரச் செலவுத்துறை அமைச்சகத்தின் இயக்குநர் முகமட் ஹனிப் அசாரி மற்றும் 10 அமலாக்க அதிகாரிகள் ஈடுபட்டனர்.

“அதிகபட்ச விலை கண்காணிப்பு மற்றும் இளஞ்சிவப்பு விலை குறியீட்டு (பிங்க் டாக்) பயன்பாடு ஆகியவை சோதனையின் முக்கியக் கவனமாக இருந்தன. ஆய்வு முடிவில், அந்த வர்த்தக நிலையம் திட்ட விதிமுறைகளைப் பின்பற்றியதுடன், சில பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலையை விடக் குறைவாக விற்பனை செய்யப்பட்டன என்பதும் கண்டறியப்பட்டது.

“மேலும், சிலாங்கூர் முழுவதும் பொருட்களின் விற்பனை நிலை கட்டுப்பாட்டில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது,” என்று இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், திட்ட விதிமுறைகளை மீறும் வணிகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிலாங்கூர் உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சு வலியுறுத்தியுள்ளது. இதில் தனிநபர்களுக்கு RM100,000 வரை, நிறுவனங்களுக்கு RM500,000 வரை அபராதம் அல்லது அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

பொதுமக்கள் தங்கள் புகார்களை பின்வரும் வழிகளில் தெரிவிக்கலாம்:

  • வாட்ஸ்அப்: 019-848 8000

  • ஹாட்லைன்: 1-800-886-800

  • Ez Adu KPDN செயலி

  • போர்டல்: http://eduan.kpdn.gov.my

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619