மாநில அரசு ஆதரவுடன் இலவசமாகப் பிற மொழி வகுப்புகள் இரு வகைகளில் வழங்கப்படுகின்றன

2 பிப்ரவரி 2026, 3:52 PM
மாநில அரசு ஆதரவுடன் இலவசமாகப் பிற மொழி வகுப்புகள் இரு வகைகளில் வழங்கப்படுகின்றன

ஷா ஆலம், பிப் 2 — சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (PPAS) ஏற்பாடு செய்யும் சிலாங்கூர்  பிற மொழி கற்பிக்கும்  திட்டம் இலவசமாக பிறமொழி வகுப்புகளை வழங்குகிறது.

இதற்கான விண்ணப்பங்கள் திங்கட்கிழமை (பிப்ரவரி 9) தொடங்கும். திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜூலியானா எஸ் முகமட் முனாவிர் கூறுகையில், மாண்டரின், அரபு, தமிழ், பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் மொழிகள் இரு வகைகளில் வழங்கப் படுகின்றன.

கற்றல் செயல்முறையை எளிதாக்கும் நோக்கில் ஒவ்வொரு அமர்வும் மூன்று மாதங்கள் நடைபெறும். “தொடர் கற்றல் திறனை மேம் படுத்திக் கொள்ள விரும்பும் அனைத்து கற்பவர்களுக்கும் இந்தத் திட்டம் திறந்துள்ளது.

எனவே, 7 முதல் 12 வயது சிறுவர்களுக்கான குழந்தைகள் வகை மற்றும் 13 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்கள் வகை ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

அனைத்து கற்றல் அமர்வுகளும் முழுமையாக ஆன்லைனில் நடத்தப்படுகின்றன. இது பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நேர இடைவெளிகளில் படி கற்க நெகிழ்வுத்தன்மை அளிக்கிறது” என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

ஒவ்வொரு மொழியும் இரு அனுபவமிக்க பயிற்றுநர்களால் கற்பிக்கப்படும் என்று ஜூலியானா கூறினார். விண்ணப்பங்கள் அதிகமாக இருந்தால் பயிற்றுனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். “ஆன்லைன் விண்ணப்பங்கள் பிப்ரவரி 9 அன்று தொடங்கும்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்களை நிரப்பி கற்க விரும்பும் மொழியை குறிப்பிட வேண்டும். மாநில குடியிருப்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வெற்றிகரமாக தேர்வு செய்யப்பட்டால் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தப் படும்” என்றார். முன்னதாக, மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறுகையில், மக்களிடையே பல மொழி திறனை வலுப்படுத்தவும் ஒற்றுமையை ஊக்குவிக்கவும் இந்த ஆண்டு முதல் மாநில அரசு இலவச ஆன்லைனில் பிறமொழி வகுப்புகளை வழங்குகிறது.

இந்த அணுகுமுறை மொழியால் மக்கள் பிளவுபடாமல், பன்மொழி  வழி உலகளவில் நாட்டின் போட்டி தன்மை கொண்டதாக்கும் வலிமை என்ற நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. கடந்த வாரம், இத்திட்டத்தை அமல்படுத்த RM500,000 சிறப்பு ஊக்கத் தொகையை அறிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619