கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் விமானங்களுக்கு 50% வரி - டொனால்ட் டிரம்ப்

1 பிப்ரவரி 2026, 2:52 AM
கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் விமானங்களுக்கு 50% வரி  -  டொனால்ட் டிரம்ப்

கனடா, பிப் 1 - கனடாவில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் விமானங்களுக்கு 50 விழுகாடு வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டியுள்ளார்.

அமெரிக்காவின் 'Gulfstream' நிறுவனம் தயாரித்த வணிக ஜெட் விமானங்களுக்குக் கனடா உடனடியாகச் சான்றிதழ் வழங்கத் தவறினால் இந்நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

Gulfstream G500, G600, G700 மற்றும் G800 உள்ளிட்ட பலவேறு விமான மாதிரிகளுக்குச் சான்றிதழ் வழங்க கனடாமறுத்து வருவதாகத் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்குப் பதிலடியாக கனடாவின் 'Bombardier Global Express' விமானங்களுக்கான சான்றிதழை ரத்து செய்யப்போவதாகவும், தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத கனடா தயாரிப்பு விமானங்கள் மீது கடும் வரி விதிக்கப்படும் என்றும் வாஷிங்டன் எச்சரித்துள்ளது.

இதனால் இருநாடுகள் இடையேயான வர்த்தக போர் இன்னும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா மற்றும் கனடா இடையே வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

இதனிடையே கனடா பிரதமர் மார்க் கார்னி நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகவும் அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைத் நிராகரிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619