பூச்சோங் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 10 ஆலயங்களுக்கு 208,000 ரிங்கிட் மானியம்

26 ஜனவரி 2026, 7:29 AM
பூச்சோங் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 10 ஆலயங்களுக்கு 208,000 ரிங்கிட் மானியம்

செர்டாங், ஜன 26- தித்திக்கும் தைப்பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு நேற்று இரவு செர்டாங் ராயா சுற்று வட்டார வாழ் இந்தியர்களை ஒன்றிணைக்கும் வகையில் 2026 ஆம் ஆண்டு நம்பிக்கை பொங்கல் விழா நேற்று இரவு மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பி இன் மற்றும் ஸ்ரீ கெம்பாங்கான் சட்ட மன்ற உறுப்பினர் YB Wong Siew KI தலைமையில் மாபெரும் தைப்பொங்கல் விழா செர்டாங் ராயா ஸ்ரீ நவசக்தி துர்க்கை அம்மன் பாண்டி முனி ஆலயத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பி இன் மற்றும் ஸ்ரீ கெம்பாங்கான் சட்ட மன்ற உறுப்பினர் YB Wong Siew KI ஆகியோரின் மக்கள் சேவை சிறந்த ஒரு எடுத்துக்காட்டாகவும் இங்குள்ள இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி பெருமளவு வரவேற்கத்தக்கது என்று ஸ்ரீ நவசக்தி துர்க்கை அம்மன் பாண்டி முனி ஆலயத் தலைவர் தொண்டர் மாமணி செல்வம் வையாபுரி தமது வரவேற்புரையில் கூறினார்.

செர்டாங் ராயாவில் நடைபெற்ற நம்பிக்கை பொங்கல் விழாவில் சிறப்பு பிரமுகராக பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பி யின் கலந்து கொண்டு செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசினார்.

இந்த விழாவில் பூச்சோங் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள

1) Kuil Sri Maha Mariamman, Batu 14 Puchong

2) Kuil Sri Maha Mariamman & Sri Perumal, Puchong Perdana

3) Kuil Sri Maha Maheswari Kaliamman, Bunga Melor

4) Kuil Muniswarar, Pangsapuri Aman, Puchong

5) Kuil Sri Maha Kaliamman, Sri Serdang

6) Kuil Sri Siva Subramanian Paripahalana Sabhai, Serdang

7) Kuil Sri Maha Mariamman Devasthanam, UPM

8) Kuil Devi Sri Nava Sakthi Durgai Amman, Serdang Raya

9) Kuil Sri Vinagar Temple, Serdang Lama

10) Kuil Sri Maha Karumariamman, Serdang Lama

ஆகிய இந்து வழிபாட்டு தலங்களுக்கு 2 லட்சத்து 8 ஆயிரம் ரிங்கிட் மானியம் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்வில்

1) Kuil Sri Maha Kaliamman, Sri Serdang

2) Kuil Sri Siva Subramanian Paripahalana Sabhai, Serdang

3) Kuil Sri Maha Mariamman Devasthanam, UPM

4) Kuil Devi Sri Nava Sakthi Durgai Amman, Serdang Raya

5) Kuil Sri Vinagar Temple, Serdang Lama

6) Kuil Sri Maha Karumariamman, Serdang Lama

ஆகியவற்றுக்கு பற்று சீட்டுகள் வழங்கப்பட்டது என்றார்.

ஸ்ரீ கெம்பாங்கான் சட்ட மன்ற உறுப்பினர் YB Wong Siew KI கூறுகையில் தமது சட்டமன்றத்தின் கீழ் உள்ள பி 40 பிரிவைச் சேர்ந்த மக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்றும் தனித்து வாழும் தாய்மார்களுக்கும் நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பி40 பிரிவைச் சேர்ந்த 400 க்கும் தனித்து வாழும் தாய்மார்களுக்கும் தலா 100 ரிங்கிட் மதிப்புள்ள பற்றுச்சீட்டும் சிறுவர்களுக்கு அங்பாவ் ஆகியவை வழங்கப்பட்டது.

2026 ஆம் ஆண்டு நம்பிக்கை பொங்கல் விழாவில் ஸ்ரீ நவசக்தி நற்பணி மன்றத் தலைவி திருமதி அன்னலட்சுமி கமலா செல்வம், பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் சிறப்பு அதிகாரிகள் எஸ்.பி. குமார், சூரிய ராஜா, மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநில கல்வி மற்றும் தொழில் நுட்ப பிரிவு தலைவரும் மலேசிய இந்து சங்கம் செர்டாங் வட்டார பேரவையின் தலைவருமான ஸ்ரீ சந்துரு கணேசன், ஸ்ரீ நவசக்தி துர்க்கை அம்மன் பாண்டி முனி ஆலயப் பொறுப்பாளர்கள் மற்றும் செர்டாங் வட்டார ஆலயப் பொறுப்பாளர்கள் உட்பட சுமார் 800 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619