சபரிமலையில் இன்று மகா மகர ஜோதி தரிசனம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 'சரண கோஷம்' முழங்க வழிபாடு

14 ஜனவரி 2026, 4:28 AM
சபரிமலையில் இன்று மகா மகர ஜோதி தரிசனம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 'சரண கோஷம்' முழங்க வழிபாடு

சபரிமலை, ஜன 14 – கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் மண்டல-மகரவிளக்கு யாத்திரை காலத்தின் உச்சகட்ட நிகழ்வான 'மகர ஜோதி' தரிசனம் இன்று மாலை கோலாகலமாக நடைபெறுகிறது.

இந்திய நேரப்படி இன்று மதியம் 3:08 மணிக்கு சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் வேளையில் நடைபெறும் 'மகர சங்கரம பூஜை'யுடன் இன்றைய நிகழ்வுகள் தொடங்கின.

அதனைத் தொடர்ந்து, பந்தள அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் ஐயப்பனின் புனித திருவாபரணங்கள் மாலை 6:15 மணி அளவில் சன்னிதானத்தை சென்றடையும்.

பின்னர், சுவாமி ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு, மாலை 6:30 மணியளவில் மகா தீபாராதனை காட்டப்படும் வேளையில், பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெய்வீக மகர ஜோதி பக்தர்களுக்கு காட்சியளிக்கும்.

இந்த புனித நிகழ்வைக் காண மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் "சுவாமியே சரணம் ஐயப்பா" என்ற சரண கோஷத்துடன் சன்னிதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் குவிந்துள்ளனர்.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கேரள அரசும் திருவிதாங்கூர் தேவசம் போர்டும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

சுமார் 5,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், நிலக்கல் மற்றும் பம்பை பகுதிகளில் வாகன போக்குவரத்திற்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு சுமார் 35,000 பக்தர்கள் மட்டுமே முன்பதிவு அடிப்படையில் சன்னிதானத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகர ஜோதி தரிசனத்தை தொடர்ந்து, வரும் ஜனவரி 20-ஆம் தேதி பந்தள ராஜ குடும்பத்தினரின் தரிசனத்துடன் சபரிமலை நடை முறைப்படி அடைக்கப்படும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619