சிலாங்கூர் மாநில அரசு, இந்தியர்கள் அல்லது குடிசைவாசிகள் விவகாரங்களில் பாராமுகமாக இருக்கிறது என்ற அரசியல் குற்றச்சாட்டில் உண்மையில்லை.

4 ஜனவரி 2026, 4:19 PM
சிலாங்கூர் மாநில அரசு, இந்தியர்கள் அல்லது குடிசைவாசிகள் விவகாரங்களில் பாராமுகமாக இருக்கிறது என்ற அரசியல் குற்றச்சாட்டில்  உண்மையில்லை.

ஷா ஆலம் ஜன 3;-சிலாங்கூர் மாநில அரசு, இந்தியர்கள் அல்லது குடிசைவாசிகள் விவகாரங்களில் பாராமுகமாக இருப்பதாகச் சில அரசியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. ஆனால்  ஒவ்வொன்றையும்  ஆழமாக ஆராய்ந்தால்  அவர்களின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பது தெரியவரும்.

3343357.jpg

கம்போங் பாப்பான்  நிலம்  முன்பு அரசாங்க நிலம் என்பது  உண்மைதான், ஆனால் 1995 ஆம் ஆண்டில் அது பேங் நெகாராவின் கைவிடப்பட்ட வீடமைப்புக்கள் மறு மேம்பாட்டு திட்டத்திற்கு  கையளிக்கப்பட்டு, பிறகு பேங் நெகாரா அந்த நிலத்தை ''மலாதி  ஏஷான்'' கட்டுமான  நிறுவனத்திற்கு மேம்பாட்டு திட்ட வரைவுடன்  2007 ஆண்டே விற்று விட்டது.

சிலாங்கூரில் 2008ம் ஆண்டு  ஆட்சிக்கு வந்த பக்காத்தான் ராயாட், அரசாங்கம் ஏற்கனவே விற்றுவிட்ட நிலம் மற்றும் முன்னைய அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பங்களை மதிக்க வேண்டிய இக்கட்டுக்கு தள்ளப்பட்டது.

ஆரம்பத்தில் முன்னைய அரசாங்கம் அங்கீகரித்த சில திட்டங்களுக்குச் சீராய்வு செய்ய முற்பட்டு ஆனால் நீதி விசாரணைக்கு ஆட்பட்டு அதில் ஏற்பட்ட தோல்விகளால் கிடைத்த  படிப்பினைகளால், முந்தைய அரசாங்கம் அங்கீகரித்த திட்டங்களை பக்காத்தான் ராயாட் அரசாங்கம் மிகக் கவனமாக அணுக வேண்டியிருந்தது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் கம்போங் பாப்பான் விவகாரத்தில் பெரிய அளவில் தலையிட முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் மக்கள் மீது கொண்ட அக்கறையின்  விளைவாக மாநில அரசு சுமார் 7 ஏக்கர் நிலத்தை மட்டுமே பெற முடிந்தது.

அதற்கான இசைவு மிகச் சமீபத்திலேயே பெறப்பட்டதால் இந்தத் திட்டத்திற்கு முழுத் திட்டவரைவு வழங்கச் சில காலங்கள் தேவை படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட மக்களின்  உடனடி குடியிருப்பு தேவைகளுக்கு,  அருகில்  உள்ள  வீடமைப்பில் தற்காலிக  வீடுகள் ஒதுக்கப் பட்டன. ஆனால்  வீடு உடைப்பில் பாதிக்கப் பட்டவர்கள் வழங்கப்பட்ட மாற்று ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்வதும்   புறக்கணிப்பதும்  அவர்களின் உரிமையாகும்.

அப்படி  இருக்க , வீடுகளை  இழந்தவர்கள் சிலர் கம்போங் பாப்பானில் தற்காலிக தங்குமிடம்  அமைப்பதாக வந்த செய்திகள் குறித்து, இந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் சிலாங்கூர்  இன்று  தொடர்பு கொண்டபோது அவர் கூறியது பின்வருமாறு.

 கம்போங் பாப்பான் பண்டமாரான் குடிசை வீடுகள் பற்றிய சட்டமன்ற உறுப்பினர் விளக்கம்
கம்போங் பாப்பான் பண்டமாரான் என்ற இடத்தில் உள்ள குடிசை வீடுகள் கடந்த மாதம் உடைத்ததால் சில குடியிருப்பாளர்களுக்கு ஏற்பட்ட திடீர் நெருக்கடிக்கு தீர்வு காணும் பொருட்டு ஒரு சிறு தற்காலிக குடியிருப்பு புத்தாண்டு தினத்தில் நிறுவியது தொடர்பாகப் பல விதச் செய்திகள் பத்திரிக்கைகளில்
பகிரப்படுவது பற்றி , அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வழங்கிய விவரம் பின் வருமாறு
தற்காலிக தங்குமிடம் அமைப்பதற்கான ஒரு பிரிவின் முடிவு குறித்து அவர் கூறியதாவது, குடியிருந்த வீடு உடை பட்டவர்களுக்குச் சிலாங்கூர் மாநில அரசு மாற்று குடியிருப்புகள் அருகில் சுமார் ஏழு கிலோ மீட்டருக்குள் வழங்கியது.

அதை ஏற்காத சிலருக்கு வீட்டு வாடகைக்கான முன்பணமும் சில நன்கொடையாளர்கள் உதவியுடன் தான் வழங்கி உள்ளதாகப் பண்டமாரான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு தோணி லியோங் தெக் சீ கூறினார்.

ஒரு குடியிருப்பாளர் தனக்குக் குடியிருக்க இடமில்லை என்று ஒரு பத்திரிக்கையாளர் வழி தன்னிடம் முறையீடு செய்தார். அவருக்கு உடனடியாகப் பெருமாஹான் சிலாங்கூர் மூலம் வீடு ஏற்பாடு செய்யப்பட்டது, ஆனால் அவர் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

நாங்கள் குடியைவாசிகளின் கோரிக்கைகளுக்கு எப்போதும் மரியாதை அளித்து வருகிறோம். எல்லா வகையிலும் மக்களின் நலனுக்குப் பாடுபடுகிறோம்.

ஒரு மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்ட மனிதாபிமானமற்ற செயல் , மாநில அரசின் செயலாகாது. அந்த இடத்தில் இதுவரை மக்களின் நலனுக்கு உகந்த சிறந்ததை வழங்க நாங்கள் முயன்று வருகிறோம் என்றார்.

முன்னதாக, கோலக்கிள்ளான், பண்டமாரான், கம்போங் ஜாலான் பாப்பான் குடியிருப்புப் பகுதியில் வீடுகளை இழந்தவர்களுக்கு, மலிவு விலை வீடுகள் வழங்கப்படும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

Permodalan Negeri Selangor Bhd-ஆல் உருவாக்கப்படவுள்ள மலிவு விலை வீடமைப்பில் அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கித் தரப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார், என்பதையும் அவர் மேற்கோள் காட்டினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619