மாட்சிமை தங்கிய பேரரசருக்கு 2026 பட்ஜெட் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது

9 அக்டோபர் 2025, 6:36 AM
மாட்சிமை தங்கிய பேரரசருக்கு 2026 பட்ஜெட் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது
மாட்சிமை தங்கிய பேரரசருக்கு 2026 பட்ஜெட் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது

கோலாலம்பூர், அக் 9 – மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் இன்று 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் முன்மொழிவை பெற ஏகமனதாக ஒப்புதல் அளித்தார். இந்த பட்ஜெட் நாளை மக்கள் அவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

பேரரசர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் முகநூல் பதிவின்படி, ஆவணத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா புக்கிட் துங்குவில் சமர்ப்பித்தார்.

நேற்று புத்ராஜயாவில் ஊடக ஆசிரியர்களுக்கு 2026 பட்ஜெட்டைப் பற்றிய விளக்கமளித்த அன்வார், இது மடாணி அரசாங்கத்தின் நான்காவது பட்ஜெட்டாகும் எனவும், மக்களின் நலனை காக்க, பொருளாதாரத்தை வலுப்படுத்த, நிலைத்தன்மை மற்றும் இணைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் நாளை மாலை 4 மணிக்கு மக்கள் அவையில் 2026 ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டு மசோதாவை சமர்ப்பிக்கவுள்ளார்.

இந்த மசோதா அடிப்படை நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களால் விவாதிக்கப்படும். அதன்பின், ஒவ்வொரு அமைச்சகத்தினரும் தங்களது பதில்களை 29 அக்டோபர் முதல் 4 நவம்பர் வரை வழங்குவர். பின்னர், குழு நிலை விவாதம் 5 நவம்பர் முதல் 27 நவம்பர் வரை நடைபெற்று, மக்கள் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619