கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாட்டில் இரத்த தானம் உள்பட மூன்று நிகழ்வுகள்- 300க்கும் அதிகமானோர் பங்கேற்பு

17 செப்டெம்பர் 2025, 8:44 AM
கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாட்டில் இரத்த தானம் உள்பட மூன்று  நிகழ்வுகள்- 300க்கும் அதிகமானோர் பங்கேற்பு
கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாட்டில் இரத்த தானம் உள்பட மூன்று  நிகழ்வுகள்- 300க்கும் அதிகமானோர் பங்கேற்பு
கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாட்டில் இரத்த தானம் உள்பட மூன்று  நிகழ்வுகள்- 300க்கும் அதிகமானோர் பங்கேற்பு

ஷா ஆலம், செப் 17 - கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியின் ஏற்பாட்டில் இரத்த தான இயக்கம், ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை, சிறார்களுக்கான ரூபெல்லா தட்டம்மை தடுப்பூசித் திட்டம் ஆகிய நிகழ்வுகள் இங்குள்ள செக்சன் 25 தாமான் ஸ்ரீ மூடாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 9வது மண்டலம் மற்றும் தாமான் ஸ்ரீ மூடா ருக்குன் தெத்தாங்கா ஏ மண்டலத்தின் ஒத்துழைப்புடன் இங்குள்ள மைடின் பேரங்காடி கார் நிறுத்துமிடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்வில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட வேளையில் 60க்கும் அதிகமானோர் இரத்த தானம் செய்ததோடு 70 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்தனர்.

இங்கு நடைபெற்ற மாநில மற்றும் மத்திய அரசின் ஏற்பாட்டிலான ஏஹ்சான் ரஹ்மா விற்பனையில் திரளானோர் கலந்து தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்களை மலிவான விலையில் வாங்கிச் சென்றனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரகாஷ், ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ராமு நடராஜன் ஏற்பாட்டிலான இந்த நிகழ்வில் திரளானோர் கலந்து கொண்டது குறித்து தாம் பெரிதும் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டார்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருந்த காரணத்தால் பலர் இரத்த தானம் செய்ய முடியாமல் போனது குறித்து கவலை தெரிவித்த அவர், அனைவரும் தங்களின் உடலாரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது என்றார்.

ஸ்ரீ மூடா வட்டார மக்களின் நலனுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுகளின் வாயிலாக பெரும் எண்ணிக்கையிலானோர் பயன் பெற்றதாக ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ராமு நடராஜன் கூறினார். இந்த நிகழ்வு வெற்றி பெறுவதற்கு துணை நின்ற ஸ்ரீ மூடா ருக்குன் தெத்தாங்கா ஏ மண்டலத்தின் தலைவர் ஆர். மோகன் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினருக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619