கங்கார், செப். 10 - கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் தீயணைப்புத் துறைக்குச் சொந்தமான நிலத்தின் பகுதியை நெல் பயிரிடப்படும் திட்டத்திற்காக வாடகைக்கு எடுத்ததில் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காகப் பெர்லிஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தீயணைப்பு வீரர் இன்று முதல் ஏழு நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டார்.
நாற்பத்தொன்பது வயதான அந்த நபருக்கு எதிராக கங்கார் நீதிமன்ற மாஜிஸ்திரேட்
அனா ரோசானா முகமது நோர் தடுப்புக் காவல் அனுமதியை வழங்கியதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) வட்டாரம் உறுதி செய்ததது.
சந்தேக நபரை தடுத்து வைப்பதற்கான விண்ணப்பத்தை பெர்லிஸ் எம்.ஏ.சி.சி.
இன்று தாக்கல் செய்த பின்னர் அவரது தடுப்புக்காவல் உறுதி செய்யப்பட்டது.
அந்த நபர் வாக்குமூலம் அளிக்க நேற்று மாலை, 4.00 மணியளவில் பெர்லிஸ் எம்.ஏ.சி.சி அலுவலகம் வந்திருந்த போது கைது செய்யப்பட்டார் என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் பெர்லிஸில் உள்ள ஒரு தீயணைப்பு மற்றும் மீட்பு மையத்தின் தலைவராக இருந்த போது அந்த தீயணைப்பு வீரர் நான்கு நெல் நடவு பருவங்களுக்கு 12,000 வெள்ளி நில வாடகை பணத்தை ஒரு விவசாயியிடம் கேட்பதற்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.
நெல் பயிரிடப்பட்ட நிலத்தின் ஒரு பகுதி தீயணைப்புத் துறைக்குச் சொந்தமானது. ஆனால், அந்த நேரத்தில் தீயணைப்பு மையத்தின் தலைவராக அந்நபர் தனது பதவியைப் பயன்படுத்தி அலுவலகத்தின் அங்கீகாரமின்றி நிலத்தை வாடகைக்கு விட்டதாக நம்பப்படுகிறது.
அவர் ஒவ்வொரு பருவத்திற்கும் நெல் வயல் வாடகையாக 3,000 கேட்பதாக நம்பப்படுகிறது. மேலும் அரசு ஊழியர் வாடகைப் பணத்தை ரொக்கமாகப் பெற்றதாக சந்தேகிக்கப்படுகிறது என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
இதற்கிடையில் அந்த தீயணைப்பு வீரர் கைது செய்யப்பட்டதை பெர்லிஸ் மாநில எம்.ஏ.சி.சி.
இயக்குநர் முகமட் நோர் அட்ஹா அப்துல் கனி உறுதிப்படுத்தினார். இந்த வழக்கு 2009ஆம் ஆண்டு
எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 23வது பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்,