ஸ்பெயின், செப் 10 - 2.76 அங்குல உயரமுள்ள 'ஹைஹீல்ஸ்' காலணியை அணிந்து கொண்டு, 100 மீட்டர் தூரத்தை பின்னோக்கி ஓடிச்சென்று 16.55 விநாடிகளில் கடந்து மீண்டும் ஓர் உலக சாதனையை ஸ்பெயினைச் சேர்ந்த கிறிஸ்டியன் ரோபர்டோ லோபஸ் ரோட்ரிக்ஸ் என்ற வீரர் படைத்துள்ளார்.
அவர் சுமார் 328 அடிகளைப் பின்னோக்கி ஓடியவாறே, இந்த மாறுபட்ட சாதனையை படைத்து அனைவரையும் ஆச்சரியப்பட செய்திருக்கின்றார்.
சுமார் 80க்கும் மேற்பட்ட கின்னஸ் உலகச் சாதனைகளை கைப்பற்றிய அவர் இதே வகை ஓட்டத்தில் இதற்கு முன்னர் 20.05 விநாடிகள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
400 மீட்டர் தூரத்தை மரக் காலணியுடன் கடந்தது, சிலிப்பர் அணிந்து கொண்டு 100 மீட்டரை குறைந்த விநாடிகளில் அடைந்தது, கையில் ஸ்நூக்கர் குச்சியுடன் 1.6 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்தது போன்ற வித்தியாசமான சாதனைகளை படைப்பதில் கிறிஸ்டியன் ரோபர்டோ மிகுந்த வல்லமைப் படைத்தவர்.