ஷா ஆலம், செப் 10 – இன்று மாலை 5 மணி வரை சிலாங்கூர், கோலாலம்பூரில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்புள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.
இதே வானிலைதான் புத்ராஜெயா, பேராக், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், ஜோகூர், சரவாக், சபா மற்றும் லாபுவான் ஆகிய மாநிலங்களில் நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக அத்துறை கூறியது.
ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு அல்லது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள் இருக்கும் போது எச்சரிக்கைகள் வெளியிடப்படுகின்றன.
இடியுடன் கூடிய மழை எச்சரிக்கைகள் என்பது ஒரு வெளியீட்டிற்கு ஆறு மணி நேரத்திற்கு மிகாமல் செல்லுபடியாகும் குறுகிய கால எச்சரிக்கைகள் ஆகும்.
சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு http://www.met.gov.my, சமூக ஊடக வலைத் தளத்தைப் பார்க்கவும், myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.