ஷா ஆலம், செப் 10: செப்டம்பர் 19 முதல் 21 வரை நடைபெறும் சிலாங்கூர்@கோம்பாக் 2025 கலாச்சார மற்றும் பாரம்பரிய விழாவில் பங்கேற்க பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.
காலை 9 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணிக்கு முடிவடையும் இந்த நிகழ்வு, பத்து கேவ்ஸ்யில் அமைந்துள்ளா கம்போங் மெலாயு வீரா டமாய் பொது மைதானத்தில் நடைபெறும் என்று முகநூல் மூலம் சிலாங்கூர் சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது.
இந்நிகழ்வில் வருகையாளர்கள் பாரம்பரிய அல்லது தேசிய உடையை அணிந்து கொண்டு கலந்து கொள்ளலாம். இதில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம்பெறும்
கூடுதலாக, முதலில் வருகை புரியும் சுமார் 3,000 வருகையாளர்களுக்கு பல்வேறு பாரம்பரிய உணவுகள் வழங்கப்படும்.
சுவாரஸ்யமான நடவடிக்கைகள் :
எக்ஸ்ட்ரீம் பார்க் கார்னிவல்
கேரம் போட்டி
மலேசிய ரிதம் பாடல் பாடும் போட்டி
பாரம்பரிய உணவு சமையல் போட்டி
குடும்ப விளையாட்டு போட்டி
குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் போட்டி
ஏரோபிக்ஸ் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ்
உணவு மற்றும் பான விற்பனை