ஷா ஆலம், செப் 10 – மாநிலத்தில் சிறு குழுவாக இணைந்து தொழில் தொடங்க விரும்பும் பெண் தொழில்முனைவோருக்கு 50,000 வெள்ளி வரையிலான மூலதன கடனுதவியை யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) வழங்குகிறது.
சிலாங்கூரில் உள்ள பெண் தொழில்முனைவோருக்கு குறிப்பாக 18 முதல் 65 வயது வரையிலானவர்களுக்கு சிறு தொழில் தொடங்க டாருல் ஏஹ்சான் வணிகக் கடனுதவித் திட்டம் (நாடி) 50,000 வெள்ளி வரை நிதியுதவி வழங்குகிறது.
நியாகா டாருல் எஹ்சான் (நாடி) திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விரும்புவோர் https://mikrokredit.selangor.gov.my என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அந்த அறவாரியம் தனது முகநூல் பதிவில் கூறியது.
விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் பிரசுரத்தின் கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்து விண்ணப்பிக்கலாம் அல்லது மேலும் தகவலுக்கு அருகிலுள்ள ஹிஜ்ரா கிளையை தொடர்பு கொள்ளலாம் என்று அது தெரிவித்தது.
தொழில்முனைவோர் சமீபத்திய மற்றும் நவீன தளங்கள் மூலம் தங்கள் வணிக முறைகளை இலக்கவியலுக்கு மாற்றுவதற்கு உதவும் நோக்கில் கோ டிஜிட்டல் திட்டம் உருவாக்கப்பட்டது.
உற்பத்தி மற்றும் சேவைகளை சந்தைப்படுத்துவதற்கான திறனை அதிகரிக்க டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறை உதவுகிறது. இதன் மூலம் இணைய விற்பனை வாயிலாக இலாபத்தை அதிகரிக்க முடியும். இது குறித்த மேலும் தகவலுக்கு www.hijrahselangor.com என்ற அகப்பக்கத்தை பார்வையிடலாம்.