கோலாலம்பூர், செப் 9 - தகுதியானவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் ரோன் 95 பெட்ரோலுக்கான இலக்கிடப்பட்ட உதவித் தொகை செயல்முறைக்கு, மை கார்டு அடையாள அட்டை பயன்படுத்தப்படும்.
அதற்கான செயல்முறைகள் சீராக இருப்பதை உறுதி செய்வதற்கு பெட்ரோல் நிலையை நடத்துனர்களுடன் அரசாங்கம் ஒத்துழைக்கும் என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.
"மேலும், மலேசியாவில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் இந்த முறை பயன்படுத்தப்படும். எரிபொருள் நிரப்பும் போது யாரும் பாதிக்கப்படாத வகையில் மை கார்ட்டை பயன்படுத்தும் கட்டண முறை பயன்படுத்துவதற்கு திறமையானதாக இருப்பதை உறுதி செய்ய பெட்ரோல் நிலைய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம்," என்றார் அவர்.
உதவித் தொகைக்கு தகுதியானவர்களை தீர்மானிக்க PADU தரவுத் தளம் பயன்படுத்தப்படுவதாக,டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் நாடாளுமன்றத்தில் கூறினார்.
ரோன் 95 பெட்ரோலுக்கான இலக்கிடப்பட்ட உதவித் தொகை செயல்முறை குறித்து இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும்.
பெர்னாமா