ஷா ஆலம், ஆக. 4 - நில உரிமை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் (எம்.பி.ஏ.ஜே.) அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதியிலுள்ள இந்து ஆலய பொறுப்பாளர்களுடன் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு அண்மையில் சந்திப்பு நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினர் சைட் அகமது சைட் அப்துல் ரஹ்மான் (அல்டிமேட்), அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக உறுப்பினர் ஆர். மோகன்ராஜ், அம்பாங் ஜெயா தொகுதி இந்திய சமூகத் தலைவர் கே.சரஸ்வதி , சிலாங்கூர் இந்து சங்கம் மற்றும் அம்பாங் வட்டார இந்து மாமன்றப் பிரதிநிதிகள் மற்றும் கோயில்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் சார்பில் அதன் துணைத் தலைவர் துவான் ஹாஜி ஹஸ்ரோல்னிசாம் பின் ஷாரி, அமலாக்கத் துறை இயக்குநர், சட்டத் துறை இயக்குநர் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் துறை இயக்குநர் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நில உரிமை இல்லாத மற்றும் நில அங்கீகாரத்திற்கு விண்ணப்பம் செய்து காத்திருக்கும் பத்து ஆலயங்கள் தொடர்பான விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.
அம்பாங் ஜெயா வட்டாரத்திலுள்ள ஆலயங்கள் எதிர் நோக்கி வரும் விவாதிப்பதற்காக பாப்பாராய்டுவின் கோரிக்கையின் பேரில் தாமும் நகராண்மைக் கழக உறுப்பினர் ஆர். மோகன்ராஜூம் ஏற்பாடு செய்ததாக இந்திய சமூகத் தலைவர் சரஸ்வதி கூறினார்.
சம்பந்தப்பட்ட ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை ஆலயங்களை உடைக்கவோ வழிபாட்டிற்கு தடையை ஏற்படுத்தவோ கூடாது என நகராண்மைக் கழகத்திற்கும்
எந்த மேம்பாட்டுப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று ஆலயப் பொறுப்பாளர்களுக்கும் பாப்பாராய்டு உத்தரவிட்டுள்ளார் என அவர் சொன்னார்.